Home இந்தியா சாதனை படைத்தது மங்கள்யான் ஏவுகணை! செவ்வாய் கிரகத்தில் நிலைநிறுத்தப்பட்டது!

சாதனை படைத்தது மங்கள்யான் ஏவுகணை! செவ்வாய் கிரகத்தில் நிலைநிறுத்தப்பட்டது!

506
0
SHARE
Ad

mangalyanபெங்களூர், செப்டம்பர் 24 – செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையில் இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரகமாக நிலைநிறுத்தப்பட்டது. முதல் சோதனையிலேயே இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இந்திய விஞ்ஞானிகள் மங்கள்யான் விண்கலத்தை இன்று காலை 8 மணயளவில் செவ்வாய் கிரக சுற்றுவட்டபாதையில் நிலைநிறுத்தி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரக சுற்றுவட்டபாதையில் விண்கலத்தை நிலைநிறுத்திய முதல் நாடு என்ற வரலாற்று சாதனையை இந்தியா நிகழ்த்தியுள்ளது. இதை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

முதல் முயற்சியிலேயே இந்தியா வெற்றி பெற்றுள்ளது பெருமைக்குரியது என்றார். மேலும் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா சாதனை படைத்துள்ளதாக மோடி பெருமிதம் கொண்டார். இந்தியா அடுத்த சவால்களுக்கு தயாராக வேண்டும் என்று மோடி தெரிவித்தார்.

செவ்வாய் சுற்றுப்பாதையில் விண்கலத்தை முதல் முயற்சியில் நிலைநிறுத்திய முதல் நாடு இந்தியா என்ற சாதனையை நிகழ்த்தியது மங்கள்யான்.