வாழைப்பழம் குடலில் சேரும் அமிலத் தன்மையைச் சரிசெய்ய வல்லது. இதனால் நெஞ்செரிச்சலிலிருந்து மாபெரும் நிவாரணத்தை தருகிறது.
வாழைப் பழத்தோடு மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடுவதால் இருமல் விரைவில் குணமாகும். பழுத்த பழமாக இருந்தால் இன்னும் விரைவில் குணம் தரும்.
வலிகண்ட இடத்தில் வாழைப்பழ தோலை சிறிது நேரம் கட்டி வைப்பதால் வலி சீக்கிரத்தில் குறைவதாக ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன.
வாழைப்பழத் தோலை தோல் நோய் மற்றும் ரத்தக் கசிவு கண்ட இடத்தில் மேல் வைத்துக் கட்டுவதாலோ அல்லது லேசாகத் தேய்த்து விடுவதாலோ விரைவில் குணம் ஏற்படும்.
வாழைப்பழத் தோலில் வீக்கத்தை கரைக்ககூடிய சக்தியும் தேமல் அரிப்பைப் போக்க கூடிய சக்தியும் நுண்கிருமிகளை அழிக்கக் கூடிய சக்தியும் அடங்கியுள்ளன.
இளம் வாழைப் பூவை எடுத்து சாறு பிழிந்து போதிய சுவைக்கான பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் தலை வலியும், ரத்த சோகையும் குணமாகும்.