Home நாடு மின்னல் பண்பலையின் ‘மின்னல் கிண்ணம்’ நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது!

மின்னல் பண்பலையின் ‘மின்னல் கிண்ணம்’ நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது!

537
0
SHARE
Ad

Minnal kinnamசிரம்பான், செப்டம்பர் 24 – கடந்த செப்டம்பர் 21 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மின்னல் பண்பலையின் ‘மின்னல் கிண்ணம்’ என்ற காற்பந்தாட்ட நிகழ்ச்சி சிரம்பானில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மின்னல் பண்பலை அறிவிப்பாளர்களோடு, உள்ளூர் நட்சத்திரங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் காற்பந்து விளையாடினர்.

இந்த நிகழ்ச்சி குறித்து மின்னல் பண்பலை வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கை பின்வருமாறு:-

#TamilSchoolmychoice

“ஒற்றுமை வலுபெற, ஒரே மலேசியா கோட்பாட்டில் வெற்றிகரமாக அமைந்தது “காலைக்கதிரின் மின்னல் கிண்ணம்”. 64 குழுக்கள் களமிறங்கிதங்கள் திறமைகளை  வெளிகாட்டினர்.”

IMG-20140923-WA0028

“மூவின மக்களின் ஒத்துழைப்பும் ஆக்கப்பூர்வமான போட்டியும், வந்திருந்த மக்களை வெகுவாகக் கவர்ந்தது. முதல் பரிசை கிராடூவான் பேர் சாத்து அணி 1000 ரிங்கிட்டை வென்றது.”

“இரண்டாவது அணியான ஸ்ட்ரீட் சொக்கர் ( Street Soccer A) முறையே 700 ரிங்கிட்டையும்  மூன்றாவது அணியான (Street Soccer B) 500 ரிங்கட்டையும் வென்றது.”

“காலைக்கதிர் அறிவிப்பாளர்கள் புவனா வீரமோகன், தெய்வீகன், ஹரி, சுகன்யா சதாசிவம், பொன்.கோகிலம், ரவின், சத்யா இவர்களோடு உள்ளூர்க் கலைஞர்கள் ரெனிதா, டெனிஸ், ஷிசே, ஹெவோஃபிரதர்ஸ், இவர்களோடு சந்தேஷ் ஆகியோரும் இணைந்து காற்பந்து விளையாடியதோடு மக்களுக்குப் போட்டி விளையாட்டுகளையும் நடத்தினர்.”

unnamed (6)

“முதல் முறையாக மின்னல் கிண்ணம் நடைபெற்றாலும் அது இளைஞர்களை நேரடியாக ஈர்த்தது மின்னலின் வெற்றியாக கருதுவதாக தெரிவித்தார் மின்னல் தலைவர் திருகுமரன். இளமை புதுமை இனிமை எனும் தாரகமந்திரத்திற்கு ஏற்ப, இளைஞர்களின் பங்கேற்பு தம்மை மலைப்படைய செய்வதாக கூறினார்.இவர்களின் விளையாட்டின் மூலம் நல்லிணக்கத்தை உருவாக்குவதே இந்த மின்னல் கிண்ணத்தின் நோக்கம் என்றாரவர்.”

“அதுமட்டுமல்லாது, மக்கள்அலையெனகாலைமுதல்மாலை 6 மணிவரை அங்கேயே எல்லா விளையாட்டாளர்களுக்கும் ஆதரவு வழங்கியது பாராட்டத்தக்க ஒன்றாக அமைந்தது என வந்திருந்த மின்னலின் நேயர்கள் அனைவருக்கும் அவர் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.”

“கலைஞர்களோடு அறிவிப்பாளர்களும் பத்திரிக்கையாளர்களும் களம் இறங்கி காற்பந்து விளையாடியது சற்று புதுமையாகவே இருந்தது.அதோடு அறிவிப்புகளை நேரடியாக சிரம்பானில் இருந்து அறிவிப்பாளர்ரவின், சத்யா இருவரும் மேற்கொண்டனர்.”

“மீண்டும் நாம் மறந்த விளையாட்டுகளை அவர்கள் இருவரும் நினைவுபடுத்தினர். மின்னல் கிண்ணத்தில் தயாரிப்பாளர் ஹரிகிருஸ்ணனுக்கு நம்முடைய பாராட்டுகள்.” இவ்வாறு அந்த பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.