Home உலகம் வட்டாரப் போர் பற்றி ஜிங்பிங் கூறியது இந்தியாவை மனதில் வைத்து அல்ல – சீனா

வட்டாரப் போர் பற்றி ஜிங்பிங் கூறியது இந்தியாவை மனதில் வைத்து அல்ல – சீனா

453
0
SHARE
Ad

china-xijinping2பெய்ஜிங், செப்டம்பர் 25 – வட்டாரப்போர் பற்றி ஜிங்பிங் கூறிய கருத்து, இந்தியாவை மனதில் வைத்து கூறியது என்று கூறப்படுவது வெறும் கற்பனையே என சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீன அதிபர் ஜிங்பிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு, “சீன இராணுவத்தின் அனைத்துப் பிரிவுகளின் தலைமையும் தங்களது போர் தயார் நிலையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், நவீன தகவல் தொழில்நுட்பயுகத்தில், வட்டார அளவிலான போரில் வெற்றி பெறும் திறனை அதிகரித்து கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இது இந்தியாவில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மிகச் சமீபத்தில் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு நாடு திரும்பியவுடன், இத்தகைய உரைகளை நிகழ்த்துவது, பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

#TamilSchoolmychoice

இந்த விவகாரத்தில் சீனா தனது நிலைப்பாட்டை நேற்று முன்தினம் வெளியிட்டது. இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுங்யிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே நிலவி வரும் எல்லைப் பிரச்சனை இரு நாடுகளின் உறவினை பாதிப்பதற்கு அனுமதிக்க மாட்டோம். இப்போதைய விவகாரத்துக்குத் திறமையாகத் தீர்வு காண முடியும். தனிப்பட்ட முறையில் என்னைப் பொருத்தவரையில், எல்லைப் பகுதி பிரச்னை முடிவுக்கு வந்து, அங்கு இப்போது அமைதி நிலவுகின்றது.”

“இரு நாடுகளின் தலைவர்களும் எல்லைப் பிரச்னைக்கு சுமூகமான பேச்சுக்கள் மூலம் தீர்வு காணப்படும் என்று ஒருமனதாகக் கூறியுள்ளனர்.”

“இந்நிலையில், இந்தியாவை மனதில் வைத்துதான் சீன அதிபர் வட்டாரப் போர் பற்றிய கருத்துக்களை கூறினார் என்பது வெறும் கற்பனையே” என்று அவர் கூறியுள்ளார்.