புதுடெல்லி, செப்டம்பர் 25 – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஐ.நா சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று அமெரிக்கா செல்கிறார்.
பிரதமராக பதவி ஏற்ற பிறகு முதன் முறையாக 5 நாட்கள் பயணமாக அமெரிக்க செல்லும் நரேந்திர மோடி, நாளை ஐ.நா. பொது சபை கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகிறார்.
மேலும், அக்கூட்டத்தில், இலங்கை அதிபர் ராஜபக்சே, நேபாள பிரதமர் ஷில் கொய்ராலா, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரை தனித்தனியே சந்தித்து பேச்சு நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்களையும் மோடி சந்திக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 29 -ம் தேதி வாஷிங்டனில், அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த 5 நாள் பயணத்தின்போது மோடி, 50 நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.