Home உலகம் இந்த ஆண்டு இறுதிக்குள் எபோலா தடுப்பு மருந்து – உலக சுகாதார அமைப்பு!

இந்த ஆண்டு இறுதிக்குள் எபோலா தடுப்பு மருந்து – உலக சுகாதார அமைப்பு!

484
0
SHARE
Ad

Ebola,நியூயார்க், செப்டம்பர் 25 – உலகம் முழுவது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய எபோலா தொற்று நோய்க்கான மருந்தினை இந்த ஆண்டு இறுதிக்குள் போதுமான அளவு தயாராகிவிடும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் பரவத் துவங்கிய எபோலா விஷத் தொற்றுநோய், அண்டை நாடுகளான லைபீரியா, சியரா, லியோனிலும் விரைவாகப் பரவியது. இந்த நோய் தாக்குதலுக்கு இதுவரை 2000-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், 6000-க்கும் மேற்பட்டோர், இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

எபோலா நோய்க்கென முறைப்படுத்தப்பட்ட சிகிச்சை முறையோ அல்லது தடுப்பூசிகளோ இதுவரை கண்டறியப்படவில்லை என்றபோதும் இரண்டு தடுப்பூசிகள் மீது தற்போது விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#TamilSchoolmychoice

எனினும், அந்த மருந்துகள் பற்றிய பரிசோதனைகள் தற்போது தீவிர ஆராயப்பட்டு வருவதால், குறிப்பிட்ட காலத்திற்குள் மருந்து தயாராவது சாத்தியமில்லாத ஒன்று என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“இந்த ஆண்டு இறுதிக்குள் போதுமான அளவு தடுப்பு மருந்துகள் தயாராகிவிடும். ஆராய்ச்சிகள் இறுதி கட்டத்தை எட்டியவுடன், நோய் கிருமிகள் தாக்கியவர்களுக்கு இந்த மருந்து செலுத்தப்பட்டு பரவிவரும் எபோலா நோய் கட்டுப்படுத்தப்படும்” என்று கூறியுள்ளது.