கோலாலம்பூர், ஆகஸ்ட் 13 – மலேசியாவில் இபோலா கிருமி கண்டறியப்பட்டதாக பேஸ்புக் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என தெரியவந்துள்ளது.
இது குறித்து சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், பொறுப்பற்றவர்கள் தான் அது போல் வதந்திகளைப் பரப்புகின்றனர். இபோலா கிருமியின் தாக்கம் மலேசியாவில் ஏற்படும் வாய்ப்பு மிக மிக குறைவு. எனவே அது போன்ற வதந்திகளைப் பரப்பாதீர்கள்” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இபோலா நோய் என்பது ஒரு வகையான காய்ச்சல். இபோலா கிருமி விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. கிருமி தாக்கிய விலங்குளின் ரத்தம், மலம் உள்ளிட்டவற்றில் இருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது.
கடந்த மார்ச் மாதம் மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் லைபிரியாவில் சுமார் 1000 பேர் வரை இந்த நோய்க்கு பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.