ஜெனீவா, ஆகஸ்ட் 13 – ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் உயரிழப்புக்கு காரணமாக இருந்த இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்படும் என ஐ.நா. அமைப்பு அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்த போரில் இதுவரை ஏறக்குறைய 2000 அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
இரு பிரிவினர்களுக்கு இடையேயான போரில் பெரும்பான்மையாகக் கொல்லப்பட்டது அப்பாவி மக்களாகும். உலக அளவில் பெரும் கண்டனங்களுக்கு ஆளான இந்த போர் குறித்தும், இரு தரப்பிலும் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்தும் சர்வதேச விசாரணை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக காசாவில் உள்ள ஐ.நா.வின் சர்வதேச பள்ளி, மருத்துவமனைகள் மற்றும் மின்நிலையம் ஆகியவை இஸ்ரேல் இராணுவத்தால் தாக்கப்பட்டதற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விசாரணை செய்ய ஐ.நா. சபை 3 உறுப்பினர்கள் கொண்ட விசாரணைக்குழுவுக்கு கனடாவை சேர்ந்த சர்வதேச சட்ட நிபுணர் வில்லியம் சபாஸின் தலைமையில் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.