Home நாடு மலேசியப் பயணிகளுக்கு இபோலா கிருமி எச்சரிக்கை!

மலேசியப் பயணிகளுக்கு இபோலா கிருமி எச்சரிக்கை!

558
0
SHARE
Ad

Malaysiaகோலாலம்பூர், ஆகஸ்ட் 2 – தென் ஆப்ரிக்கவுக்கு பயணம் செய்ய விரும்பும் மலேசியப் பயணிகள்  இபோலா கிருமியின் தாக்கத்தைத் தவிர்க்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

இது குறித்து சுகாதர பிரிவு இயக்குனர் டாக்டர் ஹிஸாம் அப்துல்லா கூறுகையில், “இபோலா உயிர்கொல்லும் ஒரு கொடிய நோய் ஆகும். இந்த கிருமி மனிதர்கள் மற்றும் குரங்குகளை தாக்கக்கூடியது. தற்பொழுது சியரா,லைபிரியா மற்றும் ஜியனியா என்ற மூன்று நாடுகளில் இதன் தாக்கங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. காயச்சல்,தசை வலி,தலை வலி,தொண்டை வலி,பலவீனம்,வாந்தி மற்றும் பேதி,தடிப்பு,சிறுநீரக மற்றும் கல்லீரல் செயலிழப்பு ஆகியவை இக்கிருமியின் தாக்கத்தை வெளிப்படுத்துக்கூடிய அறிகுறிகளாகும்.மேலும் இக்கிருமியின் தாக்கத்தினால் இரத்த கசிவு மற்றும் மரணம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “மக்கள் அனைவரும் சுகாதரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.எப்பொழுதும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.உடல்நிலை சரியில்லாதவர்கள் மற்றும் இந்த கிருமி தாக்கியவர்களின் அருகாமையில் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் இறந்த அல்லது உடலநலம் சரியில்லாத பிராணிகளின் அருகாமையில் செல்லக் கூடாது.உடல் ஆரோக்கியத்தில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அனுகி பரிசோதித்து கொள்ளுங்கள்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

#TamilSchoolmychoice

மேலும்,“ஈபோல கிருமியின் அறிக்கை சட்டம் 1988 தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு கீழ்  காட்டாயமாக்கப்பட்டுள்ளது.மலேசியாவில் இந்நோய் சமந்தமாக எந்த பதிவும் இல்லையென்றாலும்,அமைச்சகம்  அதற்கு சாத்தியமான நிகழ்வுகளைத் தடுப்பதற்கு தயராக உள்ளது.இது குறித்து அனைத்து சுகாதர அதிகாரிகள் முக்கியமாக நாட்டின் அனைத்துலக நுழைவு புள்ளிகளில் காணப்படும் அதிகாரிகள் இந்நோய் தொடர்பாக அனைத்து தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளார்கள்”என்றும் ஹிஸாம் அப்துல்லா  கூறியுள்ளார்.

உலக சுகாதர அமைப்பின் தகவல் படி, தென் ஆப்ரிக்காவின் சியரா,லைபிரியா மற்றும் ஜியனியா ஆகிய மூன்று நாடுகளில் மொத்தம் 1201 பேருக்கு இபோலா தாக்கியுள்ளதாக பதிவுச்செய்யப்பட்டுள்ளது. அதில் 672 மரண எண்ணிக்கையும் அடங்கும்.