Home நாடு இன்று புதிய ஆட்சிக் குழு வெளியீடு! இந்தியப் பிரதிநிதி சேவியரா? கணபதி ராவா? ராஜீவா?

இன்று புதிய ஆட்சிக் குழு வெளியீடு! இந்தியப் பிரதிநிதி சேவியரா? கணபதி ராவா? ராஜீவா?

655
0
SHARE
Ad

Azmin Aliஷா ஆலம், செப்டம்பர் 25 – சிலாங்கூர் மாநிலத்துக்கான புதிய ஆட்சிக் குழு உறுப்பினர்கள் அடங்கிய பட்டியலை இன்று வியாழக்கிழமை வெளியிட முடியும் எனத் தாம் நம்புவதாக மந்திரி பெசார் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை மந்திரி பெசாராக பொறுப்பேற்றுக் கொண்ட அவர், புதன்கிழமை தமது அலுவலகத்திற்கு சரியாக காலை 7.57 மணிக்கு வந்தார். இதையடுத்து அனைத்துத் துறை தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

புதிய ஆட்சிக் குழு உறுப்பினர்கள் குறித்து செவ்வாய்க்கிழமை பக்காத்தான் உயர்மட்டத் தலைவர்களுடன் கலந்தாலோசித்தார் அஸ்மின்.

#TamilSchoolmychoice

“வியாழக்கிழமைக்குள் அனைத்தும் தீர்மானிக்கப்பட்டும்,” என செய்தியாளர்களிடம் அவர் நம்பிக்கையோடு கூறினார்.

முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட், பிரச்சினைக்குரிய காலகட்டத்தில் பிகேஆர் மற்றும் ஐசெக ஆட்சிக் குழு உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்த நிலையில், பாஸ் கட்சியை சேர்ந்த ஆட்சிக் குழு உறுப்பினர்கள் மட்டும் பதவியில் நீடித்தனர்.

அந்த நால்வருக்கும் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? என்பதும் வியாழக்கிழமை தெரியவரும்.

சிலாங்கூரின் 15ஆவது மந்திரி பெசாராகப் பொறுப்பேற்றுள்ள அஸ்மின் அலி, துணை மந்திரி பெசாரை நியமிக்கப் போவதில்லை என ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சிலாங்கூர் ஆட்சிக் குழுவில் இடம் பெறப் போகும் இந்தியப் பிரதிநிதி யார் என்பது குறித்து இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.

இந்தியப் பிரதிநிதிக்கான கட்சி ஜசெகவாக இருந்தால், மீண்டும் கணபதி ராவ் நியமிக்கப்படலாம். அவருக்குப் பதிலாக ராஜீவ் ரிஷ்யாகரனும் நியமிக்கப்படும் சாத்தியம் இருக்கின்றது.

இந்தியப் பிரதிநிதியை வழங்கும் கட்சியாக பிகேஆர் முடிவு செய்யப்பட்டால், உறுதியாக சேவியர் ஜெயகுமார் அஸ்மின் அலியின் புதிய ஆட்சிக் குழுவில் இடம் பெறுவார்.