அஸ்மின் அலியை ஐசெக மிக உறுதியாக ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சிலாங்கூர் சட்டப்பேரவையில் விரைவில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் எனத் தாம் நம்புவதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் வெளியிட்ட அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த லிம் குவான் எங், அத்தகைய ஒரு திட்டத்தை ஐசெக உறுப்பினர்கள் நிச்சயமாக எதிர்ப்பார்கள் என்றார்.
“அஸ்மின் அலிக்கு எதிரான இத்தகைய நடவடிக்கை குறித்து ஐசெவுக்கு எந்தத் தகவலும் வரவில்லை. அப்படியொரு தீர்மானம் கொண்டு வரப்பட்டால் ஐசெக அதை எதிர்க்கும். ஐசெகவின் 15 சட்டமன்ற உறுப்பினர்களும் புதிய மந்திரி பெசாருக்கு ஆதரவாகவே உள்ளனர்,” என்றார் குவான் எங்.
சிலாங்கூர் மக்களின் நம்பிக்கையையும், ஆதரவையும் பெறும் நடவடிக்கையில் அஸ்மின் அலிக்கு உதவுவதில் ஐசெக இனி கவனம் செலுத்தும் என்று குறிப்பிட்ட அவர், பிகேஆர் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வாரிடம், அஸ்மின் அலிக்கான ஐசெகவின் முழுமையான ஆதரவை உறுதிப்படுத்தி இருப்பதாகக் கூறினார்.