Home கலை உலகம் இன்று தமிழ் திரையுலகம் ஜெ-க்கு ஆதரவாக அடையாள உண்ணாவிரதம்! வேலை நிறுத்தம்!

இன்று தமிழ் திரையுலகம் ஜெ-க்கு ஆதரவாக அடையாள உண்ணாவிரதம்! வேலை நிறுத்தம்!

552
0
SHARE
Ad

Jayalalithaaசென்னை, செப்டம்பர் 30 – சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தங்களின் ஒருமித்த ஆதரவைக் காட்டும் விதமாக, ஒட்டு மொத்த திரையுலகே திரண்டு, இன்று வேலை நிறுத்தம் மேற்கொள்ளவிருக்கின்றார்கள்.

அதோடு, ஒருநாள் அடையாள உண்ணாவிரதமும் மேற்கொள்ளவிருக்கின்றார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் நீண்ட கால சினிமாப் பயணம் காரணமாக அவருக்கு நெருக்கமான நண்பர்கள் வட்டாரமும், ஆதரவாளர்களும் தமிழ்த் திரையுலகில் உண்டு.

#TamilSchoolmychoice

வேலை நிறுத்தம் காரணமாக, இன்று படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, திரையரங்குகளில் திரைப்படங்களும் திரையிடப்படாது.

அமைதியான முறையில் நடைபெறவிருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்ப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் முன்னின்று ஈடுபடுகின்றன.

தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத் தலைவராக செயல்பட்டு வரும் சரத்குமார், ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர் என்பதோடு, அவரது சமத்துவ கட்சி ஜெயலலிதாவின் அதிமுகவோடு கூட்டணி உறவையும் கொண்டிருக்கின்றது.

சரத்குமார் அதிமுக ஆதரவில் சட்டமன்ற உறுப்பினராக கடந்த தேர்தலில் வென்றவரும் ஆவார்.

சேப்பாக்கத்திலுள்ள தமிழக அரசு விருந்தினர் மாளிகைக்கு அருகில் இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை இந்த அடையாள உண்ணாவிரதம், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.