Home நாடு கார் கண்ணாடிகளை கருமையாக்குவது – புதிய விதிமுறைகள்!

கார் கண்ணாடிகளை கருமையாக்குவது – புதிய விதிமுறைகள்!

538
0
SHARE
Ad

Car Tinted Photo 600 x 400கோலாலம்பூர், செப்டம்பர் 30 – வெயிலின் கிரணங்களின் பாதிப்பில் இருந்து தற்காப்புக்காக,  கார் கண்ணாடிகளை கருமையாக்குவது தொடர்பாக நவம்பர் 1ஆம் தேதி முதல் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்படும் என சாலை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

பின் இருக்கை கண்ணாடிகள் மற்றும் வாகன பின்புற கண்ணாடிக்குமான ‘புலப்படக்கூடிய ஒளி ஊடுருவும் அளவானது 50 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காடாக குறைக்கப்படும் என அத்துறையின் பொது இயக்குநர் டத்தோஸ்ரீ  இஸ்மாயில் அகமட் தெரிவித்தார்.

அதேசமயம் வாகன முன்புற கண்ணாடி மற்றும் முன்புற இருக்கை கண்ணாடிகளுக்குமான இந்த அளவானது 70 மற்றும் 50 விழுக்காடு என்ற அளவிலேயே நீடிக்கும் என்றார் அவர்.

#TamilSchoolmychoice

பல நாடுகளில் பின்பற்றப்படும் அனைத்துலக அளவீடுகளின் படியே இந்தப் புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.

புதிய விதிமுறைகள் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும் என்றார் இஸ்மாயில் அகமட்.

“புதிய விதிமுறைகளை பின்பற்றாத வாகனமோட்டிகளுக்கு வெ.300 அபராதம் விதிக்கப்படும். நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டால் வெ.1000 அபராதம் விதிக்கப்படும். அல்லது இரு வார சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டுமே விதிக்கப்படக்கூடும்.  மாமன்னர், சுல்தான்கள், ஆளுநர்கள்,  பிரதமர், துணைப் பிரதமர், மந்திரி பெசார்கள், தலைமை நீதிபதி உள்ளிட்டோர் மற்றும் அமலாக்கத்துறை, காவல்துறை, சுங்கத்துறை சார்ந்த வாகனங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படும். இந்த விதிவிலக்கானது சம்பந்தப்பட்ட தனி நபர்களின் பாதுகாப்பு கருதியே அளிக்கப்பட்டுள்ளது,” என்று இஸ்மாயில் அகமட் மேலும் தெரிவித்தார்.