Home நாடு 3 ஆட்சிக் குழு உறுப்பினர்கள்தானா? பாஸ் அதிருப்தி உறவைப் பாதிக்குமா?

3 ஆட்சிக் குழு உறுப்பினர்கள்தானா? பாஸ் அதிருப்தி உறவைப் பாதிக்குமா?

664
0
SHARE
Ad

PAS-Logoகோலாலம்பூர், செப்டம்பர் 29 – சிலாங்கூரின் புதிய ஆட்சிக் குழு றுப்பினர்கள் நியமனம் தொடர்பில் அம்மாநில பாஸ் பிரிவு தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. புதிய நியமனத்திற்கு தாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் சிலாங்கூர் பாஸ் கூறியுள்ளது.

“கடந்த முறை 4 ஆட்சிக் குழு உறுப்பினர்களைக் கொண்டிருந்த நிலையில், தற்போது 3
உறுப்பினர்களை மட்டுமே நியமிக்க நாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை,” என
சிலாங்கூர் பாஸ் செயலாளர் முகமட் கைருடின் ஓத்மான் தெரிவித்தார்.

குறைவான ஆட்சிக் குழு உறுப்பினர்களை நியமிக்க பாஸ் தலைமையும் ஒப்புக்
கொள்ளவில்லை என்று குறிப்பிட்ட அவர், மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த டாக்டர்  ஹலிமா அலி மற்றும் முக்யி ஆகிய இருவரும் ஆட்சிக் குழு உறுப்பினர்
பதவியிலிருந்து நீக்கப்பட்டது சரியான நடவடிக்கையல்ல என்றார்.

#TamilSchoolmychoice

“இது ஒரு நல்ல தொடக்கம் அல்ல. எனினும் சிலாங்கூரில் பக்காத்தான் வலுவாக
இருக்க வேண்டும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே பாஸ்
கட்சியின் விருப்பம்,” என்றார் முகமட் கைருடின் ஓத்மான்.

இதற்கிடையே பாஸ் பொதுச் செயலாளர் டத்தோ முஸ்தபா அலி, புதிய ஆட்சிக் குழு  உறுப்பினர்கள் நியமனத்தை திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

ஆட்சிக் குழு உறுப்பினர் நியமனத்தில் புதிய மந்திரி பெசாருக்கு ஏற்பட்ட நெருக்கடியை தம்மால் உணர முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“மந்திரி பெசார் நியமனம் தொடர்பாக ஏற்பட்ட நெருக்கடிக்கு முடிவு கண்டு பக்காத்தான் நடைபோட வேண்டும். அதற்காக பாஸ் செய்துள்ள அத்தியாவசியமான தியாகமாக இதைக் கருத வேண்டும்,” என அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த தியாகத்தை அனைவரும் பாராட்ட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், நமக்கு தேசிய
முன்னணியே உண்மையான எதிரிகள் என்றார்.

இருப்பினும் பாஸ் கட்சியைச் சாந்தப்படுத்துவதற்காக துணை சபாநாயகர் பதவியை அஸ்மின் அலி  பாஸ் கட்சிக்கு வழங்கலாம் என்ற ஆரூடமும் நிலவுகின்றது.