Home நாடு சிலாங்கூர் ஆட்சிக் குழுவில் பிகேஆர் 4 – பாஸ் 3 – ஜசெக 3!

சிலாங்கூர் ஆட்சிக் குழுவில் பிகேஆர் 4 – பாஸ் 3 – ஜசெக 3!

1611
0
SHARE
Ad

Azmin Aliஷா ஆலாம், செப்டம்பர் 26 – புதிய சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி தலைமையிலான புதிய ஆட்சிக் குழு உறுப்பினர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இங்குள்ள மாநிலத் தலைமைச் செயலகத்தில் அஸ்மின் அலி இந்த அறிவிப்பைச் செய்தார்.

அதன்படி முன்பு 3 பேரைக் கொண்டிருந்த பிகேஆர் கட்சி தனது ஆதிக்கத்தை மாநிலத்தில் நிலைநாட்டும் வண்ணம் தற்போது 4 ஆட்சிக் குழு உறுப்பினர்களாக உயர்த்தியிருக்கின்றது.

#TamilSchoolmychoice

முன்பு 4 பேரைக் கொண்டிருந்த பாஸ் கட்சிக்கு தற்போது 3 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜசெக பழையபடி 3 இடங்களைப் பெற்றிருக்கின்றது. இந்த நடவடிக்கையின் மூலம் எடுத்த எடுப்பிலேயே அஸ்மின் அலி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது கட்சியின் ஆதிக்கத்தை ஆட்சிக் குழுவில் பலப்படுத்தியுள்ளார்.

அதே வேளையில் பிகேஆர் கட்சியின் சார்பில் மூன்று புதுமுகங்களை அவர் ஆட்சிக் குழு உறுப்பினர்களாக நியமித்துள்ளார்.

ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் நிக் நாஸ்மி நிக் அகமட், பத்துகேவ்ஸ் சட்டமன்ற உறுப்பினர் அமிருடின் ஷாரி, தாமான் டெம்ப்ளர் சட்டமன்ற உறுப்பினர் சைடி அப்துல் தாலிப் ஆகியோரே அந்த மூவர் ஆவர்.

எஞ்சியுள்ள எழுவரும் ஏற்கனவே, முன்னாள் மந்திரி பெசார் காலிட் இப்ராகிமின் ஆட்சிக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள்.

சபாக் சட்டமன்ற உறுப்பினர் சலேஹான் முக்யி, செலாட் கிளாங் பாஸ் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஹாலிமா அலி, பிகேஆர் கட்சியின் பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் ஆகிய மூவரே ஆட்சிக் குழுவில் இருந்து நீக்கப்பட்டவர்களாவர்.

பழைய ஆட்சிக் குழு உறுப்பினர்களில் கீழ்க்காணும் எழுவரும் மீண்டும் மறு நியமனம் பெற்றுள்ளனர்.

எலிசபெத் வோங் கியாட் பிங் (பிகேஆர்-புக்கிட் லஞ்சான்)

டாக்டர் டாரோயா அல்வி (பிகேஆர்-செமந்தா),

இஸ்கந்தார் அப்துல் சமாட் (பாஸ்-செம்பாக்கா),

டாக்டர் அகமட் யூனுஸ் ஹாய்ரி (பாஸ் – சிஜங்காங்)

டத்தோ தெங் சாங் கிம் (ஜசெக – சுங்கை பினாங்)

வி.கணபதிராவ் (ஜசெக – கோத்தா அலாம் ஷா)

இயான் யோங் வா (ஜசெக – ஸ்ரீ கெம்பாங்கான்)

 

இவர்களில் இந்தியப் பிரதிநிதியாக ஜசெகவைச் சேர்ந்த கணபதி ராவ் மீண்டும் இடம் பெற்றுள்ளார்.