Home தொழில் நுட்பம் ஐபோன் 6 வளையாது: பரிசோதனை முயற்சியில் நிரூபணம்! 

ஐபோன் 6 வளையாது: பரிசோதனை முயற்சியில் நிரூபணம்! 

655
0
SHARE
Ad

iPhone 6 launchசெப்டம்பர் 29 – உலக அளவில் கடந்த 9-ம் தேதி வெளியாகி, வர்த்தக ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஆப்பிளின் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் திறன்பேசிகள் பற்றி, கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் சில வதந்திகள் உலா வருகின்றன.

அவை என்னவென்றால், ஐபோன் 6 திறன்பேசிகள்  காற்சட்டை பைகளில் பயனர்கள் வைத்துக் கொண்டு இருக்கும் போது, அழுத்தம் காரணமாக அவை தானாகவே வளைந்து போகின்றன என்பதாகும்.

விலை உயர்வுக்கு மட்டுமல்ல தரத்திற்கும் பெயர் பெற்ற ஆப்பிள் நிறுவனம், இத்தகைய மலிவான திறன்பேசிகளை உருவாக்குமா என்ற சந்தேகம், வாடிக்கையாளர்கள் மத்தியில் இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் அது பற்றி வெளியான காணொளிகள் (காண்க:http://www.selliyal.com/?p=67366) பயனர்களிடையே சற்றே கலக்கத்தை ஏற்படுத்தின.

#TamilSchoolmychoice

இந்நிலையில், ஆப்பிள் ஐபோன்கள் பற்றி வெளியான ஆதாரங்கள் அனைத்தும் நம்பகத்தன்மை அற்றவை என ஆணித்தரமாக நிரூபணமாகி  உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கை நிறுவனமான ‘கன்ஸுமர் ரிப்போர்ட்’ (Consumer Report), ஐபோன்கள் பற்றிய சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், ஐபோன் 6-ன் நிலைப்புத் தன்மை மற்றும் வளையும் தன்மை போன்றவற்றை பரிசோத்திக்க ‘மும்முனை வளையும் பரிசோதனை’ (Three-Point Flexural Test) என்ற சோதனையை செய்து, அதனை காணொளியாக ஒளிபரப்பி உள்ளது.

‘மும்முனை வளையும் பரிசோதனை’ (Three-Point Flexural Test):

இந்த பரிசோதனையில், சர்ச்சைக்கு உள்ளான ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் திறன்பேசிகளின் இருமுனைகளும், திடமான பொருட்களுக்கு மேல் வைக்கப்படுகின்றன. பின்னர் எந்திரம் மூலம், திறன்பேசிகளுக்கு மேல் அதிக அழுத்தம் கொடுக்கப்படுகின்றது.

தனது தரத்தினை நிரூபிக்க ஆப்பிள் நிறுவனம், இதே சோதனையை குறிப்பிட்ட சில பத்திரிக்கையாளர்களுக்கு மட்டும் தனது ஆய்வகத்தில் செய்து காட்டியது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள், இந்த பரிசோதனையில் 55 பவுண்ட் அழுத்தத்தை ஐபோன் 6 மீது செலுத்தியதாகக் கூறப்படுகின்றது.

ஆனால், கன்சூமர் ரிப்போர்ட் நிறுவனம் தொடக்கமே, 70 பவுண்ட் அழுத்தத்தில் சோதனையை மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சியினை ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ் மட்டும் அல்லாது ஐபோன் 5, எச்டிசி ஒன், சாம்சுங் கேலக்ஸி நோட் 3, எல்ஜி 3 ஆகிய திறன்பேசிகளிலும் செயல்படுத்தி உள்ளது.

பரிசோதனை முயற்சியின் முடிவு:

பரிசோதனையின் முடிவில், இணையத்தில் வெளியான காணொளிகள் அனைத்தும் போலித்தனமானது என நிரூபணமாகியது. ஐபோன் 6, 100 பவுண்ட் அழுத்தத்திலும், ஐபோன் 6 பிளஸ் 110 பவுண்ட் அழுத்தத்திலுமே சிதைந்துள்ளன. ஆச்சரியப்படும் விதமாக ஐபோன் 5 மற்றும் சாம்சுங் கேலக்ஸி நோட் 3 திறன்பேசிகள் 150  அழுத்தத்தில் தான் சிதைந்துள்ளன.

இதன் மூலம், ஆப்பிள், தான் தரத்திலும் சிறந்த நிறுவனம் என்று மீண்டும் நிரூபித்துள்ளது.

மேலும், ஐபோன் 6 வளைகின்றது என்ற வதந்திகளினால், ஆப்பிள் ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ் திறன் பேசிகளின் விற்பனை எண்ணிக்கையோ, வர்த்தகமோ எந்த விதத்திலும் குறையவில்லை என்றும் பாதிப்படையவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இது பற்றி காணொளியை கீழே காண்க: