சென்னை, செப்டம்பர் 26 – மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவரும் ‘ஐ’ படத்தின் அனைத்து படப்பிடிப்பு காட்சிகளும் நேற்றோடு முடிந்துவிட்டது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பு முடிந்ததை ஒட்டி, சென்னையில் ஷங்கர் உள்ளிட்ட ‘ஐ’ படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர்.
இதில் விக்ரம், எமி ஜாக்சன் ஆகியோரும் கலந்துகொண்டனர். யூடியூப்பில் வெளியான ‘ஐ’ படத்தின் முன்னோட்டத்தை (டிரைலரை) இதுவரைக்கும் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பார்த்துள்ளனர்.
ரஜினி, கமல், அஜித், விஜய் படங்களின் முன்னோட்டத்தை கூட இவ்வளவு பேர் பார்த்ததில்லை. அதனால், ‘ஐ’ படம் குறித்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
#TamilSchoolmychoice
ஷங்கர் ‘ஐ’ படத்தின் அனிமேஷன் பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். படம் தீபாவளிக்கு வரும் என்று சொல்லப்பட்டாலும், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என சினிமா வட்டரங்கள் தெரிவித்தனர்.