Home உலகம் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை கட்டுப்படுத்த ஐ.நா தீர்மானம்!

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை கட்டுப்படுத்த ஐ.நா தீர்மானம்!

628
0
SHARE
Ad

Un,ஐ.நா,  செப்டம்பர் 26 – ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேரும் வெளிநாட்டு தீவிரவாதிகளை தடுக்கும் வகையில், ஐ.நா பாதுகாப்பு ஆணையக் கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிரியா மற்றும் ஈராக்கில் செயல்படும் ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகுக்கு புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளனர். அமெரிக்கா வான்தாக்குதல் நடத்தியதற்கு பழிவாங்கும் விதத்தில் அமெரிக்க பத்திரிகையாளர்கள் இருவரை தலையை துண்டித்து கொன்றனர்.

அமெரிக்காவுக்கு இங்கிலாந்து ஆதரவு தெரிவித்ததால், இங்கிலாந்தை சேர்ந்த தொண்டு நிறுவன ஊழியர் ஒருவரையும் கொன்றனர். தற்போது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஐ.எஸ்.தீவிரவாதிகளிடம் சிக்கி பலியாகியுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் ஐ.நா.பாதுகாப்பு ஆணையக் கூட்டம் அமெரிக்க அதிபர் ஒபாமா தலைமையில் நேற்று நடந்தது. அப்போது ஐ.எஸ். அமைப்பில் வெளிநாட்டு தீவிரவாதிகள் சேர்வதை கட்டுப்படுத்தும் விதத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

தீவிரவாத நடவடிக்கைகளுக்காக நடைபெறும் ஆட்கள் தேர்வு, திட்டமிடுதல், பயிற்சி அளித்தல், பயிற்சி பெறுதல், பயணத்துக்கு நிதி உதவி அளிப்பது போன்ற நடவடிக்கைகளை ஐ.நா. பாதுகாப்பு ஆணையத்தில் உள்ள உறுப்பு நாடுகள் தடுக்க வேண்டும்.

ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்-நுஸ்ரப் முன்னணி(ஏ.என்.எப்) மற்றும் அல்கய்தாவின் இதர தீவிரவாத பிரிவுகளில் வெளிநாட்டு தீவிரவாதிகள் சேர்வதை தடுக்க இந்த தீர்மானத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

தீவிரவாத பணிகளை மேற்கொள்வதற்காக வெளிநாடு செல்பவர்களை விசாரிக்கும் வகையில் உறுப்பு நாடுகள் சட்டம் கொண்டு வர வேண்டும். தீவிரவாத பணிக்காக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டவர்கள் மீண்டும் தாய்நாடு திரும்புவதை தடுக்க வேண்டும்.

தீவிரவாதிகளின் செயல்பாடுகள், அவர்களின் வலைத் தொடர்பு போன்ற தகவல்களை உறுப்பு நாடுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.