Home நாடு கவிஞர் பொன் நாவலன் காலமானார்

கவிஞர் பொன் நாவலன் காலமானார்

778
0
SHARE
Ad

கோலாலம்பூர், செப்டம்பர் 27 – நாடறிந்த பிரபல எழுத்தாளரும், கவிஞருமான பொன் நாவலன் (படம்) நேற்று காலமானார்.

Pon Navalan Malaysian writer

மலேசிய எழுத்துலகில் நன்கு அறிமுகமான பொன்.நாவலன், உடல் நலம் குன்றியிருந்த காலங்களில் கூட தவறாமல் தலைநகரில் நடைபெறும் இலக்கியக் கூட்டங்களிலும், எழுத்தாளர் நிகழ்வுகளிலும் தவறாமல் கலந்து கொண்டிருந்தவர்.

#TamilSchoolmychoice

தீப்பொறிக் கவிஞர் என அழைக்கப்பட்ட டி.எஸ்.பொன்னுசாமியின் கவிதை மாணாக்கர்களில் ஒருவர்.

நாகப்பன் என்ற இயற்பெயர் கொண்ட அவருக்கு வயது 61.  பத்தாங் பெர்ஜூந்தை மேரி தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். தமிழகத்தின் உவமைக் கவிஞர் சுரதா மீது கொண்ட  இலக்கிய ஈடுபாட்டின் காரணமாக, மலேசிய சுரதா இலக்கிய மன்றம் என்ற அமைப்பைத் தோற்றுவித்து அதன் தலைவராகச் செயல்பட்டார்.

தனது படைப்புக்களை, அவர் நூல் வடிவத்திலும் கொண்டு வந்துள்ளார்.

அன்னாரின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

தொடர்புக்கு: 019-6605959; 019-3942463