Home நாடு 2011-ல் கூறிய கருத்துக்கு இப்போது விசாரணையா? – அன்வார் கொதிப்பு

2011-ல் கூறிய கருத்துக்கு இப்போது விசாரணையா? – அன்வார் கொதிப்பு

511
0
SHARE
Ad

Anwar-Ibrahim_1568721cகோலாலம்பூர், செப்டம்பர் 27 – மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கூட்டம் ஒன்றில் தான் பேசிய கருத்தை, இவ்வளவு நாட்களுக்குப் பிறகு அதிகாரிகள் தற்போது பெரிதுபடுத்தி தேச நிந்தனை குற்றச்சாட்டை சுமத்துவது ஏன் என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2011 -ம் ஆண்டு மார்ச் மாதம் 25 -ம் தேதி, தாமான் மெலாவத்தியில், தனது ஓரினப்புணர்ச்சி வழக்கின் தீர்ப்பு குறித்து அன்வார் பேசிய கருத்துக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

அந்த புகாரை தற்போது ஆய்வு செய்து விசாரணை நடத்தும் படி காவல்துறைக்கு சட்டத்துறை உத்தரவிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த வழக்கில் அஸ்மின் அலி , சாரி சங்கிப் மற்றும் அமிருதீன் ஷாரி ஆகிய மூன்று பக்காத்தான் தலைவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.