Home இந்தியா நியூயார்க்கில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்தார் பிரதமர் மோடி!

நியூயார்க்கில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்தார் பிரதமர் மோடி!

501
0
SHARE
Ad

modi-rajapaksaநியூயார்க், செப்டம்பர் 28 – ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் உரையாற்ற சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்து பேசினார்.

அமெரிக்காவுக்கு அரசு முறைப்பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி நியூயார்க்கில் ஐ.நா. சபை கூட்டத்தில் உணர்ச்சிகரமான உரையாற்றினார்.

பின்னர் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாள பிரதமர் கொய்ராலா ஆகியோரை நேற்று பிரதமர் மோடி சந்தித்து பேசினார். நாளை வாஷிங்டன் செல்லும் மோடி, அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்து பேசுகிறார்.

#TamilSchoolmychoice

அமெரிக்காவின் பல்வேறு மாகாண ஆளுநர்கள், கூகுள் மற்றும் பெப்சிகோ நிறுவனத்தின் தலைவர்களையும் மோடி சந்தித்து பேசுகிறார்.