18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது.
இதையடுத்து ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோனது. இதனால் அடுத்த முதல்வரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் அதிமுகவினர் உள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், வெங்கட்ராமன் உள்ளிட்ட 4 பேர் இன்று காலை விமானம் மூலம் பெங்களூர் சென்றனர்.
அடுத்த முதல்வர் பதவிக்கு அடிபடும் 4 பெயர்களில் ஷீலா பாலகிருஷ்ணனின் பெயரும் ஒன்று ஆகும். சிறை வளாகத்தில் எண் 23-ம் அறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு அளிக்கப்பட்ட எண் 7402 ஆகும்.