Home இந்தியா ஜெயலலிதாவிற்கு சிறையில் தரப்பட்ட உணவுகள் களி உருண்டை, சாதம், சாம்பார், தயிர், ஊறுகாய்!

ஜெயலலிதாவிற்கு சிறையில் தரப்பட்ட உணவுகள் களி உருண்டை, சாதம், சாம்பார், தயிர், ஊறுகாய்!

790
0
SHARE
Ad

jaya-dinnerபெங்களூர், செப்டம்பர் 28 – பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு சனிக்கிழமை இரவு கேழ்வரகு உருண்டை, சாதம், சாம்பார், தயிர் சாதம், ஊறுகாய் வழங்கப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பு அளித்தது.

இதையடுத்து ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக தீர்ப்பை அறிவித்தவுடன் தனக்கு மயக்கம் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டதாக ஜெயலலிதா தெரிவித்தார். இதையடுத்து அவரை சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பின்னர் அறை எண் 23-ல் அடைக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

அவருக்கு இரவு உணவாக கேழ்வரகு உருண்டை, சாதம், சாம்பார், தயிர் சாதம், ஊறுகாய் வழங்கப்பட்டதாக சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜெயலலிதாவுக்கு சிறையில் 24 மணிநேரமும் சிறப்பு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறையில் அவருக்கு வெள்ளை புடவை வழங்கப்பட்டது.