Home உலகம் ஹாங்காங்கில் தீவிரமடையும் சுதந்திரப் போராட்டம் – சீனா கவலை!

ஹாங்காங்கில் தீவிரமடையும் சுதந்திரப் போராட்டம் – சீனா கவலை!

838
0
SHARE
Ad

Hongkong 440 x 215ஹாங்காங், செப்டம்பர் 30 –  சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் சுதந்திரமான ஜனநாயக தேர்தலை வலியுறுத்தி மாணவ அமைப்பினர் மற்றும் மக்கள் மாபெரும் போராட்டத்தை முன்வைத்துள்ளனர்.

காவல் துறையினர், கடுமையான நடவடிக்கைகளை எடுத்தும் நேற்று முதல் மக்கள் விரிவான பெரும் அளவிலான போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

பிரிட்டனின் வசம் இருந்த ஹாங்காங், கடந்த 1997-ம் ஆண்டு சீனாவுடன் இணைந்தது. ஒரு நாடு இரு ஆட்சி முறை என்ற அடிப்படையில் ஜனநாயக அரசு ஹாங்காங்கில் நடைபெறுவதுபோல் வெளித்தோற்றம் காட்டப்பட்டாலும், சீனா தனது முழு அதிகாரத்தை ஹாங்காங்கின் அனைத்து அரசியல் அமைப்புகளிலும் செலுத்தி வருகின்றது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் எதிர்வரும் 2017-ம் ஆண்டு ஹாங்காங்கில் எவ்வித தலையீடுகளும் இன்றி ஜனநாயகம் மலர வேண்டும் என ஜனநாயக சார்பு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த சீன அரசு அந்நாட்டின் உயர்மட்டக் குழுவின் ஒப்புதல் பெற்ற வேட்பாளர்களே தேர்தலில் போட்டியிடமுடியும் என்று தெரிவித்தது.

இந்த முடிவினை எதிர்த்து ‘ஒக்குபை சென்ட்ரல்’ (Occupy Central) – சென்டரலை ஆக்கிரமியுங்கள் – என்ற வாசகங்களை ஏந்தி கல்லூரி மாணவர்கள்  மற்றும் மக்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர். ஹாங்காங்கின் பிரதான அரசு அலுவலகத்தை நேற்று முன்தினம் முதல் அவர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

போராட்டத்தை தடுக்கும் விதமாக காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி கண்ணீர் புகைகுண்டுகளை வீசி தாக்கினர். இதில் பலர் காயமடைந்தனர். எனினும் அவர்களால் மக்கள் கூட்டத்தை கலைக்க முடியவில்லை.

நாளுக்குநாள் வலுபெற்று வரும் போராட்டத்தால், மக்கள் குடியரசு ஆட்சியின் 65-வது ஆண்டு விழாவை கொண்டாடும் மனநிலையில் இருந்த சீனா, கடும் குழப்பம் அடைந்துள்ளது.