Home வணிகம்/தொழில் நுட்பம் துரித ரயில் திட்டம் : எம்ஆர்டி நிறுவனம் தேசிய மின்வாரியத்துடன் ஒப்பந்தம்

துரித ரயில் திட்டம் : எம்ஆர்டி நிறுவனம் தேசிய மின்வாரியத்துடன் ஒப்பந்தம்

1183
0
SHARE
Ad

கோலாம்பூர், டிசம்பர் 14 – காஜாங்-சுங்கை பூலோ நகர்களுக்கிடையிலான துரித ரயில் திட்டம் மிக வேகமாக வளர்ச்சி பெற்று வருகின்றது. இந்த ரயில் திட்டத்திற்காக மின்சாரம் வழங்கும் ஒப்பந்தம் ஒன்று இன்று இந்த ரயில் திட்டத்தை மேற்கொண்டு வரும் எம்ஆர்டி நிறுவனத்திற்கும் தேசிய மின்சார வாரியத்திற்கும் இடையில் இன்று கையெழுத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் எதிர்வரும் 2050 வரை இந்த ரயில் திட்டத்துக்கான மின்சாரத்தை தேசிய மின்சார வாரியம் வழங்கி வரும். இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 173.1 மில்லியன் ரிங்கிட்டாகும்.

காஜாங் – சுங்கைபூலோ துரித ரயில் திட்டத்தின் முதல் கட்டம் 2016 இறுதி வாக்கில் முடிவுற்று ரயில் சேவைகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களுள் ஒன்றாக பிரதமர் நஜிப்பால் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களில் முதன்மை வகிப்பது இந்த துரித ரயில் திட்டமாகும்.