Home இந்தியா இந்தியா – அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் மேலும் 10 ஆண்டுகள் நீட்டிப்பு!

இந்தியா – அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் மேலும் 10 ஆண்டுகள் நீட்டிப்பு!

706
0
SHARE
Ad

india-button-flag-mapவாஷிங்டன், அக்டோபர் 1 – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க வருகையின் போது நிகழ்ந்த பேச்சு வார்த்தைகளின் காரணமாக, அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையில் இருந்து வரும் பாதுகாப்பு ஒப்பந்தம் மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு ஒப்பந்த நீட்டிப்பைத் தொடர்ந்து, அமெரிக்கா தனது தொழில் நுட்பத்தை இந்தியாவுக்கு மாற்றித் தருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு சாதகமான ஒன்று என்ற குற்றச்சாட்டுகள் கடந்த காலத்தில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice