Home நாடு புத்ராஜெயாவுடனான தண்ணீர் ஒப்பந்தம் மறு ஆய்வு – அஸ்மின் அலி அறிவிப்பு

புத்ராஜெயாவுடனான தண்ணீர் ஒப்பந்தம் மறு ஆய்வு – அஸ்மின் அலி அறிவிப்பு

530
0
SHARE
Ad
Azmin-Ali1

ஷா ஆலம், அக்டோபர் 2 – புத்ராஜெயாவுடன் தண்ணீர் விநியோக மறுசீரமைப்பு தொடர்பில் சிலாங்கூர் அரசு செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து சிலாங்கூர் பொருளாதார நடவடிக்கை மன்றம் (கவுன்சில்) மறு ஆய்வு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறும் என்று செய்தியாளர்களிடம் மந்திரி பெசார் அஸ்மின் அலி புதன்கிழமை தெரிவித்தார்.

சிலாங்கூர் மந்திரி பெசாராக டான்ஸ்ரீ காலிட் பதவி வகித்தபோது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சில ஒப்பந்தங்கள் அவசர கதியிலும், மறைமுகமாகவும் மேற்கொள்ளப்பட்டதாக பிகேஆர் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கடந்த வாரம் குற்றம்சாட்டி இருந்தார்.

#TamilSchoolmychoice

இந்த ஒப்பந்தங்களின் மூலம் குறிபப்பிட்ட தரப்பினர் ஆதாயமடைந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

புத்ரா ஜெயாவுடனான தண்ணீர் ஒப்பந்தமானது டான்ஷ்ரீ காலிட் தனது பதவிக் காலத்தின் இறுதிக்கட்டத்தில் செய்து கொண்டது என்பதுடன், தனக்குப் பின்னர் மந்திரி பெசாராகப் பொறுப்பேற்பவரும் இந்த ஒப்பந்தத்தை பின்பற்ற வேண்டியிருக்கும் என்றும் அவர் அறிவித்தார்.

இந்த ஒப்பந்தத்தின் வழி லங்காட் 2 தண்ணீர் சுத்தகரிப்பு நிலையத்தை புத்ரா ஜெயா நிர்மாணிக்க வழிவகுக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாட்டை பக்காத்தான் கடுமையாக எதிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.

காலிட்டை மந்திரி பெசார் பதவியில் இருந்து நீக்கும் முடிவை பக்காத்தான் தலைமை மேற்கொண்டதற்கு, புக்ரா ஜெயாவுடனான இந்த தண்ணீர் ஒப்பந்தம் மற்றும் லங்காட் 2 தண்ணீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கும் ஒப்பந்தம் ஆகியவை முக்கிய காரணங்கள் ஆகும்.