Home அவசியம் படிக்க வேண்டியவை மலேசியாவில் ‘கூகுள்  ஸ்ட்ரீட் வியூவ்’ அறிமுகம்!

மலேசியாவில் ‘கூகுள்  ஸ்ட்ரீட் வியூவ்’ அறிமுகம்!

660
0
SHARE
Ad

google-street-view-malaysia-mobile

கோலாலம்பூர், அக்டோபர் 2  – மலேசியாவின் வானுயர் கட்டிடங்கள், சுற்றுலாப் பகுதிகள், நகரங்கள் போன்றவற்றின் முகவரிகள்விவரங்கள், குறிப்புகளை படங்களுடன் அறிந்து கொள்ள கூகுள் நிறுவனம்கூகுள் மேப்பில் புதிய சேவையை மேம்படுத்தி உள்ளது.

கூகுள் ஸ்ட்ரீட் வியூவ்‘ (Google Street View) என்ற இந்த புதிய சேவையின் மூலம் பயனர்கள் தாங்கள் காண வேண்டிய பகுதிகளை – சாலைகளை புகைப்படங்கள் மூலமாகவே காண முடியும். அதன் மூலம் அவர்கள் அந்த பகுதிகளை எளிதாகக் கண்டறியலாம்.

#TamilSchoolmychoice

நேற்று முன்தினம் முதல் செயல்படத் துவங்கி உள்ள இந்த சேவை பற்றி கூகுள் நிறுவனத்தின் மலேசியப் பிரிவிற்கான நிர்வாக இயக்குனர் சஜித் சிவாநந்தன் கூறுகையில்,

தெற்காசியாவில் சிறந்த வளர்ச்சியை நோக்கி மலேசியா முன்னேறிக் கொண்டிருக்கின்றது. பன்முகத் தன்மை காரணமாக நாட்டின் வளர்ச்சி முன்னேற்றத்தை நோக்கி உள்ளது. இந்நிலையில், பயணர்களுக்கு வழிகாட்ட மேப் சேவை மட்டும் அல்லாது குறிப்பிட்ட பகுதிகளுக்கான படங்களும் காண்பதற்கான வாய்ப்புகளை இந்த ஸ்ட்ரீட் வியூவ் ஏற்படுத்திக் கொடுக்கும்”

google-street-view-malaysia-2

“இதில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்கள் கார்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு படம் பிடிக்கப்பட்டுள்ளது. அதனால் மலேசியாவின் 90 சதவீத பகுதிகளுக்கான படங்கள் இந்த புதிய தளத்தில் உள்ளது. இந்த படங்கள் நிரந்தரமானவை அல்ல.இவற்றை மாதம் ஒருமுறை மாற்றிக் கொண்டே இருப்போம்”

“தெளிவற்ற படங்கள் மற்றும் தவறான தகவல்களை சரி செய்து கொள்ள கூகுள் தயாராக உள்ளது.  எனவே பயனர்கள் ‘report a problem’ என்ற தொடர்பு வழியாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய இயலும்”

“கூகுள் மலேசியா தற்சமயம், ஸ்ட்ரீட் வியூவ் சேவையை மேம்படுத்த தேவையான பாணிகளை செய்து வருகின்றது. இதன் மூலம் பயணர்களின் செலவுகள் குறைக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.