Home உலகம் தெருவோர குழந்தைகளுக்காக பாகிஸ்தானில் பள்ளிகூடம் தொடங்கி வைத்தார் மடோனா!

தெருவோர குழந்தைகளுக்காக பாகிஸ்தானில் பள்ளிகூடம் தொடங்கி வைத்தார் மடோனா!

861
0
SHARE
Ad

madonaகராச்சி, அக்டோபர் 2 – பாகிஸ்தானின் கராச்சி நகரில் தெருவோரம் வாழும் குழந்தைகளுக்கு போதுமான கல்வியறிவு பெறுவதற்காக, நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்ட பள்ளியை அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி மடோனா துவங்கி வைத்தார்.

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தை சேர்ந்தவர் பிரபல பாப் பாடகி மடோனா லூயிஸ் சிகோன் (56). இவர் இன்று வரை அமெரிக்காவில் பாப் இசையில் முடிசூடா ராணியாக திகழ்ந்து வருகிறார்.

பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் பல்வேறு ஏழை நாடுகளில் வசிக்கும் இளம்பெண்களின் கல்வி வளர்ச்சிக்கு, பல்வேறு பாப் இசை நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டி அளித்து வருகிறார்.

#TamilSchoolmychoice

பாகிஸ்தானில் கராச்சி நகருக்கு வெளியே தெருவோரம் வசிக்கும் குழந்தைகள் கல்வி அறிவுக்காக பல்வேறு வசதிகளுடன் கூடிய நவீன பள்ளி அமைக்கப்படும் என்று லண்டனில் கடந்த ஆண்டு நடந்த இசை நிகழ்ச்சியின் போது மடோனா அறிவித்தார்.

Pakistani-Schoolஇதை தொடர்ந்து, கராச்சி நகரில் பள்ளி அமைக்கும் பணி நடைபெற்றது. தற்போது அதன் பணிகள் நிறைவு பெற்றது. நேற்று அந்தப் பள்ளி துவங்கப்பட்டது. பள்ளியில் சுமார் 1,200 சிறுமிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளியை தொடங்கி வைத்த மடோனா, மாணவிகளுடன் தான் இருக்கும் படத்தை நேற்று வெளியிட்டார்.

பாகிஸ்தானில் பெண்களின் கல்வி குறித்து மறுமலர்ச்சி ஏற்பட்டு வருகிறது. தற்போது இந்த பள்ளியில் 1,200 மாணவ, மாணவிகள் நவீன கல்வியறிவை பெறத் துவங்கியுள்ளனர். இதன்மூலம் அவர்களின் பள்ளி கனவு நனவாகி வருகிறது‘ என்று மடோனா கூறினார்.