Home உலக சினிமா இன்ஸ்டாகிராம் தணிக்கையை எதிர்த்து நிர்வாணப் படம் வெளியிட்டார் மடோனா!

இன்ஸ்டாகிராம் தணிக்கையை எதிர்த்து நிர்வாணப் படம் வெளியிட்டார் மடோனா!

627
0
SHARE
Ad

madonaலண்டன், ஏப்ரல் 6 – சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பயனர்கள் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் ஹேஸ் டேக்குகளை தணிக்க செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பிரபல பாடகி  மடோனா தனது முழு நிர்வாண படத்தை வெளியிட்டுள்ளார்.

புகைப்படங்களைப் பரிமாறிக் கொள்ள உதவும் இன்ஸ்டாகிராம் வலைத்தளம், சமீப காலமாக அதிகரித்து வரும் மத உணர்வுகளை காயப்படுத்தும் படங்கள், வன்முறை மற்றும் பாலுணர்வை தூண்டும் படங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய ஹேஸ் டேக்கள் போன்றவற்றை தணிக்கை செய்ய முடிவு செய்தது. இதற்கு சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தாலும், இன்ஸ்டாகிராம் பயனர்கள் பலர் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

தனிமனிதர்களின் கருத்து சுதந்திரத்தில் தலையிடும் விதமாக இன்ஸ்டாகிராம் செயல்படுகிறது என குற்றம் சாட்டினர். இந்நிலையில் பாடகி  மடோனா தனது முழு நிர்வாண படத்தை வெளியிட்டு, இன்ஸ்டாகிராம் தணிக்கை முறைக்கு தனது எதிர்ப்பை காட்டி உள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் அவர், சமூக வலைத்தளங்களின் கபடத்தனம் அப்பட்டமாகத் தெரிகின்றது என்றும் கூறியுள்ளார்.