Home இந்தியா நான் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறேன் – மோடி பேச்சு!

நான் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறேன் – மோடி பேச்சு!

386
0
SHARE
Ad

narendra-modi1-600புது டெல்லி, ஏப்ரல் 6 – டெல்லியில் இன்று நடைபெறும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றிய நரேந்திர மோடி, அரசியல்வாதிகள் 24 மணி நேரமும் ஊடகங்களால் கண்காணிக்கப்படுகின்றனர். கண்காணிக்கப்படுபவர்களில் நானும் ஒருவன் என்று கூறியுள்ளார்.

இந்த மாநாட்டில் அவர் பேசியதாவது:- “இதற்கு முன்பெல்லாம் கிசுகிசு பகுதியில் இடம்பெற தகுதியற்றதாக இருந்த செய்திகள் கூட தற்போதைய தலைப்பு செய்திகளாகி விடுகின்றன. நான் 24 மணி நேரமும் ஊடகங்களால் கண்காணிக்கப்படும் அரசியல்வாதி சமுதாயத்தை சேர்ந்தவன்”.

“நாம் சார்ந்திருக்கும் இந்த சமுதாயம் மீது ஏகப்பட்ட அவப்பெயர் உள்ளது. ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், நம் மீது ஏகப்பட்ட கண்காணிப்புகள் மையப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையம், தகவல் அறியும் உரிமை சட்டம், லோக்பால் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அரசியல்வாதிகளான நம்மை கண்காணித்து வருகின்றன”.

#TamilSchoolmychoice

“ஒருவர் எவ்வளவு நல்லவராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அவர் சார்ந்துள்ள அமைப்பின் செயல்பாடு சரியின்றி போனால் தகுதி இழப்புக்கு ஆளாக வேண்டியதுதான். பெற்றோர், தங்களது வீடுகளில் பணம் வைக்கும்போது பாதுகாப்பான இடத்தில் வைத்து பூட்டி, சாவியை பத்திரப்படுத்தி கொள்கின்றனர்”.

“திருடர்களிடம் இருந்து பணத்தை பாதுக்காக்க அவர்கள் இவ்வாறு செய்வதில்லை. பெட்டகத்தையே தூக்கிச் சென்றுவிட திருடர்களால் முடியும். தங்கள் வீட்டு பிள்ளைகள் தீய பழக்கங்களுக்கு ஆளாகி விடக்கூடாதே என்ற நோக்கத்தில்தான் பெற்றோர் இதுபோல் செய்கின்றனர். இது நமக்கும் கூட அவசியமாகின்றது” என பேசினார் மோடி.