Home உலகம் அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார் சிறிசேனா!

அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார் சிறிசேனா!

509
0
SHARE
Ad

maithri-pak-nawas-2கராச்சி, ஏப்ரல் 6 – இலங்கை அதிபர் சிறிசேனா அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார் அவருக்கு அங்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா மூன்று நாள் பயணமாக பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

maithri-pak-nawas-3கராச்சி விமானநிலையத்தில் இறஙக்கிய அவருக்கு சிந்து மாகாண முதல்வர் சையது குவாயிம் அலி ஷா வரவேற்றார். அதனையடுத்து இஸ்லாமாபாத்திற்கு சென்ற சிறிசேனாவை விமான நிலையத்தில் பிரதமர் நவாஸ் ஷெரீப் வரவேற்றார். தொடர்ந்து இன்று (தி்ங்கட்கிழமை) பாகிஸ்தான் அதிபர் ஹூசைனை சந்தித்து பேசுகிறார்.

maithri-pak-nawas-4பின்னர் இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட முக்கியத்துறைகளி்ல் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. மைத்ரிபால சிறிசேனா அதிபராக பதவியேற்ற பின்னர் பாகிஸ்தான் செல்வது இது முதல்முறையாகும்.