Home கலை உலகம் இன்று வெளியாகும் ‘யான்’ படம் ஜீவாவுக்குக் கை கொடுக்குமா!

இன்று வெளியாகும் ‘யான்’ படம் ஜீவாவுக்குக் கை கொடுக்குமா!

660
0
SHARE
Ad

Yaan-Movieசென்னை, அக்டோபர் 2 – ரவி கே. சந்திரன். இயக்கத்தில் ஜீவா, துளசி நடித்திருக்கும் படம் யான். இப்படம் இன்று உலகம் முழுவது வெளியாகியுள்ளது.

ஒளிப்பதிவாளர்கள் இயக்குநர்களாவது ஆண்டாண்டு காலமாக நடந்து கொண்டிருக்கும் விஷயம்தான். அப்படி இயக்குனராக மாறியுள்ளவர்களில் ஒருவர் தான் ரவி கே. சந்திரன். பல வெற்றிப் படங்களின் ஒளிப்பதிவாளரான இவர், இயக்குனராக அறிமுகமாகும் முதல் படம் ‘யான்’.

ஜீவா, துளசி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். இன்று இப்படம் வெளியாகியுள்ளது. 2003-ல் ‘ஆசை ஆசையாய்’ படம் மூலம் நாயகனாக அறிமுகமான ஜீவாவுக்கு அமீர் இயக்கத்தில் வெளிவந்த ‘ராம்’ படம்தான் சரியான அடையாளத்தைக் கொடுத்தது.

#TamilSchoolmychoice

Yaan Movieஅதன் பின் வெளிவந்த ‘ஈ, கற்றது தமிழ்’ ஆகிய படங்கள் அவரது நடிப்புத் திறமையை நிரூபித்தாலும், சிறந்த வெற்றி படமாக ‘சிவா மனசுல சக்தி, ‘கோ’ ஆகிய படங்கள் மட்டும்தான் உள்ளது.

ஜீவா தனிப்பட்ட கதாநாயகனாக ‘கோ’ படத்திற்குப் பிறகு பெரிய வெற்றி எதையும் பெறவில்லை. மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘முகமூடி’, கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ‘நீதானே என் பொன்வசந்தம்’ ஆகிய படங்கள் தோல்விப் படங்களாகவே அமைந்தன.

yaan-poster-jiivaஅதனால் ஜீவா தற்போது ‘யான்’ படத்தை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம். ‘கோ’ படத்தில் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறிய கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார்.

அதே போல ‘யான்’ படத்தை ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறியுள்ள ரவி கே.சந்திரன் இயக்கியுள்ளார். இரண்டுமே ஒரு வார்த்தைப் படங்கள். அதனால் ‘கோ’ வெற்றி ‘யான்’ படத்திலும் கிடைக்கும் என்று படக்குழுவே நம்பிக் கொண்டிருக்கிறார்களாம்.