Home கலை உலகம் மலேசியக் கலையுலகம்: சரத்குமார் படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் ஹரிதாஸ்!

மலேசியக் கலையுலகம்: சரத்குமார் படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் ஹரிதாஸ்!

735
0
SHARE
Ad

Nee Naan Nizhalசென்னை, அக்டோபர் 3 –  சரத்குமார் நடித்த ‘நீ நான் நிழல்’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் பிரசாத் ஸ்டுடியோவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மலேசியாவில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தில், சரத்குமாருடன் மலேசியாவின் பிரபல நடிகரான ஹரிதாஸ் முக்கியக் கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.

Hari

#TamilSchoolmychoice

கதாநாயகனுக்கே உரித்தான கம்பீரத் தோற்றமும், மிகுந்த நடிப்பு ஆற்றலும் கொண்டவரான ஹரிதாஸ் மலேசிய மக்களால் பெரிதும் விரும்பப்படும் ஒரு நட்சத்திரம். அவருக்கென்று மலேசியாவில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

Haridass

அந்த ரசிகர்களுக்கு ஹரிதாஸ் நடித்துள்ள இப்படம் நிச்சயம் ஒரு இன்ப விருந்தாகவே அமையும். காரணம், நிச்சயமாக ஹரிதாசின் நடிப்பு இப்படத்தில் பேசப்படும் என்று கூறப்படுகின்றது.

திகில், மர்மம் நிறைந்த இந்த திரைப்படத்தை ஜான் ராபிசன் எழுதி இயக்கியுள்ளார்.படத்துக்கு நஸீர் ஒளிப்பதிவு செய்துள்ளார். நிகில் வேணு எடிட்டிங் செய்துள்ளார். ஜெசின் ஜார்ஜ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் மூலம் மலேசியக் கலைஞரான ஹரிதாஸ், உலக அளவில் தனது திறமையை நிரூபிக்கவுள்ளார். அவருக்கு செல்லியல் சார்பாக வாழ்த்துகள்.

– ஃபீனிக்ஸ்தாசன்