Home கலை உலகம் பெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது – பாடகர் யேசுதாஸ் சர்ச்சை பேச்சு!

பெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது – பாடகர் யேசுதாஸ் சர்ச்சை பேச்சு!

818
0
SHARE
Ad

yasudasதிருவனந்தபுரம், அக்டோபர் 3 – பெண்கள் ஜீன்ஸ் உடை அணிவது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்று பிரபல கர்நாடக இசைக் கலைஞரும், திரைப்பட பின்னணி பாடகருமான கே.ஜே.யேசுதாஸ் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திருவனந்தபுரத்தில் தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய காந்தி ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், ‘பெண்கள் ஜீன்ஸ் அணிவதனால் மற்றவர்களுக்கு தொல்லை தரக்கூடாது. எதை மறைத்து வைக்க வேண்டுமோ அது மறைத்தே இருக்க வேண்டும் என்றார்.

இது போன்ற உடைகள் எளிமையையும், அன்பையும் பெண்களின் உயர்ந்த குணங்களாக கொண்ட இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்று தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

கே.ஜே.யேசுதாஸின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மகிளா காங்கிரசை சேர்ந்த பெண்கள், பெண்களின் சுதந்திரத்தை பாதிப்பதாக இந்த கருத்து இருக்கிறது. இந்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி திருவனந்தபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

யேசுதாஸ் ஒரு சிறந்த பாடகர், இசைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் இந்தியாவுக்கே பெருமை சேர்ப்பவை. ஆனால், அப்படிப்பட்டவரிடம் இருந்து இப்படி பெண்களுக்கு எதிரான கருத்து வருவது துரதிருஷ்டவசமானது என மகிளா காங்கிரஸ் தலைவர் பிந்து கிருஷ்ணா கூறியுள்ளார்.