Home கலை உலகம் பாடகர் யேசுதாசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வேட்டி கட்டிய பெண்கள்!

பாடகர் யேசுதாசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வேட்டி கட்டிய பெண்கள்!

1025
0
SHARE
Ad

jesudhas_challenge_002 (1)கேரளா, அக்டோபர் 14 – பெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்று கூறிய பாடகர் யேசுதாசுக்கு சில கேரள பெண்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.

பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸ் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி நடந்த விழாவில் பேசுகையில் பெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது. அவர்கள் ஜீன்ஸ் அணிந்து பிறருக்கு பிரச்சனை ஏற்படுத்தக் கூடாது என்று கூறினார்.

இதற்கு கேரள மாநிலம் தவிர பிற மாநில பெண்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு மதிப்புமிக்க பாடகர் இவ்வாறா பேசுவது என்று பெண்கள் கோபம் அடைந்தனர்.

#TamilSchoolmychoice

yasudasஇந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த சில பெண்கள் யேசுதாசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வேட்டி அணிந்து அதை மடித்துக் கட்டி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

ஜீன்ஸே அணியக் கூடாது என்று அவர் கூறியுள்ள நிலையில் அந்த பெண்கள் வேட்டியை மடித்துக் கட்டி சவால் ஏற்கப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.