Home உலகம் சிரியா ஐ.எஸ் படையில் பெண் மருத்துவர் உட்பட 22 மலேசியர்கள்!

சிரியா ஐ.எஸ் படையில் பெண் மருத்துவர் உட்பட 22 மலேசியர்கள்!

729
0
SHARE
Ad

syrian-forces-640x320கோலாலம்பூர், அக்டோபர் 5 – சிரியாவில் உள்ள ஐ.எஸ் படையில் மலேசியாவைச் சேர்ந்த 26 வயது பெண் மருத்துவர் உட்பட 22 மலேசியர்கள் இருப்பதை காவல்துறை உறுதி செய்துள்ளது.

அந்தப் பெண் மருத்துவர் அதே படையில் உள்ள ஒரு மலேசியரைத்தான் திருமணம் செய்துள்ளார் என்று புக்கிட் அமானில் உள்ள தீவிரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பிரிவின் முதன்மை துணை இயக்குநர் டத்தோ அயுப் கான் மைதீன் பிச்சை தெரிவித்துள்ளார்.

சிலாங்கூரைச் சேர்ந்த 23 வயது ஆடவர் மற்றும் திரங்கானுவைச் சேர்ந்த 29 வயது பெண் ஆகியோரும் ஐ.எஸ். படையில் உள்ள 22 மலேசியர்களில் அடங்குவர் என்றார் அவர்.

#TamilSchoolmychoice

“46 வயதான தமது வெளிநாட்டு மனைவியுடன் மலேசியாவைச் சேர்ந்த 35 வயது ஆடவர் ஒருவரும் சிரியா சென்றுள்ளார்,” என்றார் அயுப் கான்.

ஐ.எஸ். படையில் உள்ள அக்குறிப்பிட்ட மலேசிய பெண் மருத்துவர், தனது முகநூல் பக்கத்தின் வழி மலேசிய பெண்களிடம் பிரசாரம் செய்து வருவதாகவும் இது கவலைக்குரிய விஷயம் என்றும் அவர் தெரிவித்தார்.

“அந்த மருத்துவரின் அடையாளத்தையும் அவரது பின்னணியையும் ஆராய்ந்து வருகிறோம். அவரது குடும்பம் குறித்த கூடுதல் தகவல்களை பெற முயற்சித்து வருகிறோம். அவர் சிரியா செல்வதற்கு தூண்டுகோலாக அமைந்த காரணம் குறித்தும் ஆராய்கிறோம்.

“முகநூல் வழி அவரால் பெண்களை எளிதில் கவர முடியும். சிரியாவில் நல்ல உணவும் உறைவிடமும் கிடைக்கிறது என புகைப்படங்கள் வழி காட்ட முயற்சிக்கக்கூடும். ஆனால் பல பெண்கள் வலுக்கட்டாயமாக போராளிகளுக்கு பாலியல் அடிமைகளாக்கப்பட்டு சீரழிக்கப்பட்டுள்ளனர்.

ஒருவேளை மலேசியர்கள் இதுவரை இத்தகைய பாலியல் அடிமைகளாக்கப்படாமல் இருந்திருக்கலாம். இதை மலேசிய பெண்கள் அறிவது நல்லது,” என்றார் அயுப் கான் மைதீன் பிச்சை.