Home நாடு சிரியாவில் ஆறாவது மலேசியப் போராளி பலி!

சிரியாவில் ஆறாவது மலேசியப் போராளி பலி!

634
0
SHARE
Ad

Rise-Al-qaeda-Syria

கோலாலம்பூர், பிப்ரவரி 27 – சிரியாவில் நடைபெற்று வரும் சண்டையில் மலேசியாவைச் சேர்ந்த மேலும் ஒரு போராளி உயிரிழந்துள்ளார்.

55 வயதான அபு அய்ஸ்யா என்ற அந்நபர் சிரியா அரச படைகளின் தாக்குதலில் சிக்கி 5 மாதங்களுக்கு முன் படுகாயம் அடைந்துள்ளார். இதையடுத்து துருக்கி அழைத்து செல்லப்பட்ட அவருக்கு அங்கு வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

#TamilSchoolmychoice

கடந்த ஆண்டு பிப்ரவரியில் சிரியா சென்ற அபு அய்ஸ்யா, ஐஎஸ்ஐஎஸ் படையில் இணைந்து செயலாற்றியதாகத் தெரிகிறது.

இந்நிலையில், 5 மாதங்களுக்கு முன் சிரியா அதிபர் ஆசாத் ஆதரவுப் படைகள் நடத்திய தாக்குதலில் அபு அய்ஸ்யா காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதற்காக துருக்கியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், மிகுந்த வலி மற்றும் வேதனையால் அவதிப்பட்டு வந்த அவர், தற்போது மரணம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அபு அய்ஸ்யா மரணத்திற்கு சமூக வலைதளங்கள் வழி அவரது நண்பர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.கடந்த மே மாதம் சிரியாவில் அகமட் டார்மினி என்ற மலேசியர் மனித வெடிகுண்டாக செயல்பட்டு பலியானார். இவரே சிரியாவில் பலியான முதல் மலேசியர் ஆவார்.

இதையடுத்து அகமட் அப்துல் மனாஃப், அபு துராப், சாஹிடி முகமட் கிர் ஆகிய மலேசியர்களும் அடுத்தடுத்து பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.