Home உலகம் முப்பரிமாண அச்சில் உருவான முதல் ஜெட் என்ஜின் வெளியீடு!

முப்பரிமாண அச்சில் உருவான முதல் ஜெட் என்ஜின் வெளியீடு!

699
0
SHARE
Ad

jets1கேன்பெர்ரா, பிப்ரவரி 27 – ‘முப்பரிமாண அச்சு தொழில்நுட்பம்’ (3D – Printing) மூலம் உருவாக்கப்பட்ட முதல் ஜெட் என்ஜினை ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக வெளியிட்டுள்ளனர்.

இதன் மூலம் எதிர்காலத்தில் விலை மலிவான, எடை குறைந்த ஜெட் என்ஜின்களை உருவாக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள மொனாஷ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், சில வர்த்தக நிறுவனங்களுடன் சேர்ந்து முப்பரிமாண அச்சில் ஜெட் என்ஜின்களை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.

#TamilSchoolmychoice

அவர்கள் போயிங், ஏர்பஸ் மற்றும் ராய்தான் நிறுவனங்களுக்கு தேவையான முன்மாதிரிகளை தயாரிப்பதற்கு இரகசியமாக ஈடுபட்டு வந்தனர். தற்போது அதற்கு வெற்றி கிடைத்துள்ளது.

இது குறித்து மொனாஷ் பல்கலைக்கழகத்தின் அமெய்ரோ பொறியியல் பிரிவின் தலைவர் சைமன் மர்ரியோட் கூறுகையில், “விமான நிறுவனங்களுக்கு இந்த செயல்முறை புதிய அனுபவத்தை ஏற்படுத்தலாம். எஞ்சின்களின் வழக்கமான தயாரிப்பை விட இந்த முறையில், 4 மடங்கு வேகத்துடன் தயாரிக்கப்படுகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

leap-engine-story-topமுப்பரிமாண அச்சு தொழில்நுட்பம் ஆரம்ப காலத்தில் தொழில்நுட்ப பொருட்களின் முன்மாதிரிகள் தயாரிக்க மட்டும் பயன்பட்டு வந்தது.

அதன் பின்னர் ஏற்பட்ட தொழிநுட்ப புரட்சியில் இந்த தொழில்நுட்பம் மருத்துவம், ஆராய்ச்சி, தொழிற்சாலை என அனைத்து பிரிவுகளிலும் பயன்படத் தொடங்கி விட்டது.

இதன் மூலம் ஒரு பொருள் உருவாக்கத்திற்கு சாதாரண தயாரிப்பு முறைகளில் 3 மாதம் தேவைபட்டால் இந்த முறையில் 6 நாட்களே போதுமானது.

குறைந்த வேலைப்பளுவில் செறிவான செயல்பாடு இருப்பதால் இந்த தொழில்நுட்பம் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. ஆஸ்திரேலியா, இந்த தொழில்நுட்பத்தில் மற்ற உலக நாடுகளை விட அதிக முனைப்புடன் செயல்படுகிறது.

அதனால், தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த என்ஜின்களை வர்த்தகப்படுத்துவதும் அந்நாட்டிற்கு எளிதான செயலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.