Home நாடு செம்பாக்கா இடைத்தேர்தல்: நிக் அப்டு களமிறக்கப்பட அதிக வாய்ப்பு?

செம்பாக்கா இடைத்தேர்தல்: நிக் அப்டு களமிறக்கப்பட அதிக வாய்ப்பு?

590
0
SHARE
Ad

Nik Mohd Abduhகோலாலம்பூர், பிப்ரவரி 27 – செம்பாக்கா சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாஸ் கட்சியின் வளரும் தலைவரான நிக் அப்டு நிக் அசிஸ் களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளந்தான் முன்னாள் மந்திரி பெசாரும், செம்பாக்கா தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ நிக் அசிஸ் அண்மையில் காலமானார். இதையடுத்து இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

புதன்கிழமை இரவு பெங்காலான் செப்பா தொகுதியில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், அதில் நிக் அப்டு பெயரே முதன்மையாக இருந்தது எனவும் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

34 வயதான நிக் அப்டுக் ஏற்கெனவே பாசிர் மாஸ் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக உள்ளார். பாஸ் கட்சியின் வளர்ந்து வரும் நட்சத்திரமாக கருதப்படும் அவர், இடைத்தேர்தலில் களமிறக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

எனினும் வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பெங்காலான் செப்பா தொகுதி தலைவரும், கிளந்தான் துணை மந்திரி பெசாருமான டத்தோ முகமட் அமர் நிக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

“கிளந்தானைப் பொறுத்தவரையில் வழக்கமாக ஒருவருக்கே இரு தொகுதிகள் கொடுக்கப்படுவதில்லை. எனினும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணங்கள், சிறப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அத்தகைய வாய்ப்பு வழங்கப்படுவதுண்டு. இதற்கு முன்னுதாரணங்களும் உள்ளன,” என்றார் நிக் அப்துல்லா.

பெங்காலான் செப்பா நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளில் செம்பாக்காவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.