Home One Line P1 பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 மலேசியர்கள் சிரியாவில் கைது

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 மலேசியர்கள் சிரியாவில் கைது

1091
0
SHARE
Ad

ஈப்போ – பயங்கரவாதப் போர்களில் சிக்கியிருக்கும் மத்திய கிழக்கு நாடான சிரியாவில் 65 மலேசியர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 40 பேர் மீண்டும் மலேசியா திரும்பக் கேட்டுக் கொண்டுள்ளதால் அவர்களை மலேசியாவுக்குத் திரும்பவும் கொண்டு வரும் முயற்சிகளில் புக்கிட் அமான் ஈடுபட்டுள்ளது.

காவல் துறையின் பயங்கரவாத எதிர்ப்பு சிறப்புப் பிரிவின் தலைவர் அயூப்கான் மைடின் பிச்சை (படம்) இந்தத் தகவலை வெளியிட்டதோடு, அந்த 40 பேர்களில் 11 பேர் ஆண்கள், எஞ்சியவர்கள் பெண்கள், குழந்தைகள் எனவும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட ஆண்கள் சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டிருக்கின்றனர். பெண்களும், குழந்தைகளும் ஐ.நா. முகாம்களில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

சிரியாவில் இயங்கும் முகாம்கள் உணவுப் பற்றாக்குறையால் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கியிருப்பதாகவும் அயூப்கான் தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை இரவு ஈப்போவில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிகையாளர்களிடம் அயூப்கான் பேசிய போது இந்தத் தகவல்களை வெளியிட்டார்.