Home உலகம் அதிபர் ஒபாமாவின் ஹஜ்ஜு பெருநாள் வாழ்த்து

அதிபர் ஒபாமாவின் ஹஜ்ஜு பெருநாள் வாழ்த்து

576
0
SHARE
Ad

Obamaவாஷிங்டன், அக்டோபர்  4 – இந்தாண்டு ஹஜ்ஜு புனித யாத்திரை மேற்கொள்பவர்களுக்கும், அனைத்துலக இஸ்லாமியர்களுக்கும் தனது ஹஜ்ஜு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமா.

“நம்மிடையே உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் நண்பர்கள் ஹஜ்ஜு பெருநாளைக் கொண்டாடும் வேளையில், லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் மேற்கொள்ளும் புனிதப் பயணத்தில் அமெரிக்க இஸ்லாமியர்களும் இடம்பெற்றுள்ளனர். எந்த மதம், இனம், பாலினம், என்ன வயது என்பதை எல்லாம் மீறி மனிதநேயத்தின்படி நாம் அனைவரும் ஒன்று என்பதை நினைவூட்டுவதாக இது அமைந்துள்ளது,” என்று தமது வாழ்த்துச் செய்தியில் ஓபாமா தெரிவித்துள்ளார்.

ஹஜ்ஜு திருநாளன்று ஏழைகளுக்கு உதவும் மரபை இஸ்லாமியர்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். பசியாலும், நோயாலும் இன்ன பிற அடக்குமுறை மற்றும் பிரிவினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவக்கூடிய பல்வேறு அமைப்புகளுடன் கைகோர்த்துச் செயல்படுகிறார்கள்.

#TamilSchoolmychoice

“சமத்துவமான அமைதிச் சூழ்நிலையில் அனைவரும் மதிப்புடனும், உரிய நீதியுடனும் இணைந்து செயல்பட முடியும் என்பதற்கான வலுவான உதாரணமே இந்தச் சேவை. அமெரிக்க மக்கள் சார்பாக அனைவருக்கும் இந்த விடுமுறை நாளுக்கான வாழ்த்துக்கள்,” என்று ஓபாமா மேலும் தெரிவித்துள்ளார்.