Home நாடு துன் சுஹைலா மறைவு – பிரதமர் நஜிப் இரங்கல்

துன் சுஹைலா மறைவு – பிரதமர் நஜிப் இரங்கல்

632
0
SHARE
Ad

Tun suhailahகோலாலம்பூர், அக்டோபர்  5 –  மலேசியாவின் மூன்றாவது பிரதமர் துன் ஹுசேன் ஓனின் துணைவியாரும், நடப்பு தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் துன் ஹுசேன் ஓனின் தாயாருமான துன் சுஹைலாவின் மறைவுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

தனது பெரியம்மாவான துன் சுஹைலாவின் இழப்பு குறித்த தன்னுடைய துக்கத்தைப் பகிர்ந்து கொள்வதாக தமது சமுக வலைதளப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எனது பெரியம்மாவும், ஹிஷாமுடின் ஹுசைனின் தாயாருமான துன் சுஹைலாவின் மறைவு குறித்த செய்தி அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்தேன். ஹிஷாமுடின் ஹுசேனின் குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் அவர்களது துக்கத்திலும் பங்கெடுத்துக் கொள்கிறேன். மறைந்த அவரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்,” என்று சனிக்கிழமை காலை தமது வலைத் தளப் பதிவில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

பிரதமர் நஜிப்பின் தாயார் துன் ராஹா, துன் சுஹைலாவின் இளைய சகோதரி ஆவார்.
சனிக்கிழமை அதிகாலை 12.30 மணி அளவில் 82 வயதான துன் சுஹைலா காலமானார்.