Home கலை உலகம் 2015 ஆஸ்கார் விருதுப் பட்டியலில் இந்தியத் திரைப்படம் ‘லையர்ஸ் டைஸ்’

2015 ஆஸ்கார் விருதுப் பட்டியலில் இந்தியத் திரைப்படம் ‘லையர்ஸ் டைஸ்’

659
0
SHARE
Ad

Geethu Mohandasஅக்டோபர் 5 – குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் கீது மோகன் தாஸ். மலையாள திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர், தமிழில் மாதவனுடன் ‘நளதமயந்தி’ என்ற படத்தில் நடித்து தமிழ் நாட்டில் பிரபலமானார்.

பின்னர், மலையாள ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவியை திருமணம் செய்தவர், இயக்கத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் உணர்வுகளை மிக இயல்பாக அனிமேஷனில் காட்டி கீது இயக்கிய ‘கேட்குன்னுண்டோ’ என்ற குறும்படம் பல விருதுகளைக் குவித்தது.

#TamilSchoolmychoice

வேலைக்காக வேறு மாநிலத்திற்கு புலம்பெயரும் ஒரு குடும்பம் பற்றிய கதையை மையமாக வைத்து கடந்த ஆண்டு அவர் இயக்கிய ‘லையர்ஸ் டைஸ்’ என்ற திரைப்படம் ‘சிறந்த நடிகை’, ‘சிறந்த ஒளிப்பதிவு’ என்ற இரு தேசிய விருதுகளைக் குவித்ததோடு, தற்போது ஆஸ்கார் விருது பரிசீலனைக்கும் தேர்வாகியிருக்கின்றது.

‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்’ என்ற பிரிவில் தேர்வாகியுள்ள இந்த படத்திற்கு விருது கிடைக்குமா? என்பது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தெரியவரும்.