Home கலை உலகம் ‘மெட்ராஸ்’ படத்தைப் பாராட்டிய ரஜினி!

‘மெட்ராஸ்’ படத்தைப் பாராட்டிய ரஜினி!

489
0
SHARE
Ad

p18சென்னை, அக்டோபர் 7 – ’அட்டகத்தி’ ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி, கேத்ரின் தெரஸா நடித்து கடந்த செப்டம்பர் 22-ம் தேதி வெளியான படம் ‘மெட்ராஸ்’. ’பருத்திவீரன்’ படத்திற்குப் பிறகு கார்த்தி நடிப்பில் ஒரு படம் அதிகம் பாராட்டப் பெற்றது என்றால் அது இந்தப் படமாகத்தான் இருக்க முடியும்.

ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல திரை பிரபலங்களும் படத்தைப் பாராட்டி வருகின்றனர்.  இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மெட்ராஸ் படத்தை பார்த்ததும், இயக்குநர் ரஞ்சித்தைப் பாராட்டியுள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் தளத்தில் ரஞ்சித் தனது கருத்தைப்  பதிவு செய்துள்ளார். ‘கலக்கிட்ட, எப்படி கண்ணா இப்படி படம் பண்ண , சூப்பர் கண்ணா’ என ரஜினி பாராட்டியதாக தெரிவித்துள்ளார் ரஞ்சித்.

#TamilSchoolmychoice