Home உலகம் நேபால் பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்து 25 பேர் பலி!

நேபால் பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்து 25 பேர் பலி!

519
0
SHARE
Ad

bus crashகாத்மாண்டு, அக்டோபர் 7 – நேபாலின் தலைநகர் காத்மாண்டுவின் மேற்குப் பகுதியில் உள்ள மலைத்தொடர் ஒன்றில் பேருந்து ஒன்று 300 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கிற்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

காத்மாண்டுவின் மேற்குப் பகுதியில் உள்ள தோதியில் இருந்து தங்காதிக்கு தசரா விழா கொண்டாடத்திற்காக 100 பயணிகள், பேருந்து ஒன்றில் பயணம் மேற்கொண்டனர்.

சத்திவான் கிராமத்திற்கு அருகில் உள்ள மலைச் சாலை வழியே பேருந்து பயணித்துக் கொண்டு இருக்கையில், திடீரென கட்டுப்பாட்டை இழந்து 300 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கிற்குள் கவிழ்ந்து விழுந்தது.

#TamilSchoolmychoice

தகவல் கிடைத்து விரைந்து வந்த காவல் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது பள்ளத்தாக்கிற்குள் பலியான  25  உடல்கள்  கைப்பற்றப்பட்டன.

படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலரின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகின்றது. அதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.