கிள்ளான், பிப்.25- நாட்டின் 13-வது தேர்தலை சந்திக்க பயப்படவில்லை என்றும், வெற்றியும் தோல்வியையும் சந்திக்க தயார் நிலையில் இருப்பதாக பக்கத்தான் ராக்யாட் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.
ஸ்ரீ அண்டாலாஸ் தாம ராக்யாட் விளையாட்டு மைதானத்திற்கு வருகை புரிந்த அவர் 5 ஆயிரம் மக்கள் முன்னிலையில் இவ்வாறு பேசினார்.
“தேர்தல் பயத்தால் பிரதமர் இது நாள் வரை எப்போது தேர்தல் என்று அறிவிக்கக் கூட முடியாமல் அவர்தான் அச்சத்தோடு உள்ளார்.
ஆனால், தோல்வியை சந்திக்க பக்கத்தான் தயார் நிலையில் இருக்க வேண்டும் என பிரதமர் கூறியது முறையற்ற கூற்றாகும்” என்று அன்வார் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், மகாத்மா காந்தியின் கொள்கைகள் தமக்கு மிகவும் பிடிக்கும் எனவும், குறிப்பாக நேர்மையான அரசியல் இருந்தால் தான் நமது நாட்டில் நல்லாட்சி நடக்கும் என்று மேலும் கூறினார்.
அக்கூட்டத்தில், காந்தியைப் பற்றியும் அவரின் கொள்கைகளைப் பற்றியும் மக்களுக்கு எடுத்துரைத்தார். தாமும் காந்தியை பின்பற்றுவதாக அக்கருத்துகள் எடுத்துரைக்கும் போது கூறினார்.
“தேர்தலுக்குப் பிறகு எது நடந்தாலும் சந்திக்கத் தயங்கவில்லை, இந்நாட்டு மீது கொண்டுள்ள பற்றும் மக்களின் நிலையை உயர்திடவும் பக்கத்தான் அரசாங்கம் லட்சியம் கொண்டுள்ளது. நேர்மையான ஆட்சி இந்நாட்டில் மலரும்” என்று மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.