Home கலை உலகம் ‘ஐ’ படம் தீபாவளிக்கு வராதா? நவம்பர் மாதம் 14-ம் தேதியா? புதிய தகவல்!

‘ஐ’ படம் தீபாவளிக்கு வராதா? நவம்பர் மாதம் 14-ம் தேதியா? புதிய தகவல்!

548
0
SHARE
Ad

ai_008சென்னை, அக்டோபர் 8 – பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் அதிக செலவில் உருவாகி வரும் திரைப்படம் ஐ. இப்படத்தின் மேல் ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தை பற்றி ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு தமிழ் மட்டுமில்லாது, தெலுங்கு மற்றும் இந்தியிலும் விக்ரமே மொழி மாற்றதிற்கு பேசி வருகிறாராம்.

தற்போதைக்கு தெலுங்கில் மொழி மாற்றம் பேசி முடித்துவிட்டாராம் விக்ரம். அடுத்து இந்தியில் பேச ஆரம்பிக்க இருக்கிறாராம். அதேபோல் இப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என படக்குழுவினர் கூறியிருந்தனர்.

#TamilSchoolmychoice

ஆனால் தற்போது இப்படம் நவம்பர் மாதம் 14-ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்து அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.