Home நாடு “துணைத் தலைவரை மறைமுகமாக சாட வேண்டாம் – சிறுமைப்படுத்தாதீர்கள்” – முருகையா வேண்டுகோள்

“துணைத் தலைவரை மறைமுகமாக சாட வேண்டாம் – சிறுமைப்படுத்தாதீர்கள்” – முருகையா வேண்டுகோள்

733
0
SHARE
Ad

Murugiah T. Datoகோலாலம்பூர், அக்டோபர் 11 – மஇகா தேசியத் துணைத் தலைவராகவும், அமைச்சராகவும் பதவி வகிக்கும் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியத்தை சில விவகாரங்கள் தொடர்பில் தேவையின்றி விமர்சிப்பதும் வம்புக்கு இழுப்பதும் சரியல்ல என்று பிரதமர் துறையின் முன்னாள் துணை அமைச்சர் டத்தோ முருகையா (படம்) தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கும் இந்திய சமுதாயத்துக்கும் சிறந்த சேவையாற்றி வரும் ஒரு நல்ல தலைவரை சிறுமைப்படுத்தும் விதமாக சிலர் தவறான விமர்சனங்களை முன்வைப்பது சரியல்ல என்றும் முருகையா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

“மஇகா உட்கட்சித் தேர்தல் தொடர்பில் சில தரப்பினருக்கு அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பிரதமரைச் சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் இது அதிருப்தியாளர்கள் தன்னிச்சையாக எடுத்த முடிவு. இதனுடன் டத்தோஸ்ரீ சுப்பிரமணியத்தை தொடர்புபடுத்தி பேசுவது எந்த வகையிலும் நியாயம் அல்ல. தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதற்காக கிளைத் தலைவர்களுக்கு               300 வெள்ளி முதல் 500 வெள்ளி வரை அவர் பண விநியோகம் செய்திருப்பதாகக் கூறப்படுவது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இது மஇகா கிளைத் தலைவர்களையும்
அவமானப்படுத்தும் செயல்” என்றும் முருகையா கருத்து தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“மேலும் குண்டர் கும்பலுக்கு பணப்பட்டுவாடா செய்திருப்பதாகவும் கற்பனையுடன் கூடிய குற்றச்சாட்டுகளை சிலர் சுமத்தி உள்ளனர். ஒரு நல்ல தலைவரை இது போன்று கற்பனையான குற்றச்சாட்டின் பேரில் விமர்சிப்பது, அதுவும் நமது துணைத் தலைவரை நாமே விமர்சித்துக் கொள்வது, ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல. மேலும் டாக்டர் சுப்பிரமணியம் அவ்வாறு தரங்கெட்ட அரசியலில் ஈடுபடுபவரும் அல்ல. தேசிய துணைத் தலைவராக உள்ள அவரை தேவையின்றி விமர்சிப்பது சொந்தக் கட்சிக்கே குழி பறிக்கும் செயலே அன்றி வேறல்ல. மேலும் நாட்டின் அமைச்சராக பதவி வகிக்கும் ஒருவரைப் பற்றி தரம் தாழ்த்தியும் நாகரிகமற்ற முறையிலும் கற்பனையாகவும் குற்றம் சாட்டுவதும் தவறு. இதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்வது நல்லது. தேவையற்ற விரோதம் பாராட்டி, கற்பனைகளில் மூழ்கி மஇகாவின் மாண்பை சீர்குலைத்துவிட வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்,” என்று டத்தோ முருகையா கூறியுள்ளார்.