Home தொழில் நுட்பம் அக் 16 -ல் ஆப்பிள் அடுத்த தயாரிப்புகள் பற்றிய அறிவிப்பினை வெளியிடலாம்!

அக் 16 -ல் ஆப்பிள் அடுத்த தயாரிப்புகள் பற்றிய அறிவிப்பினை வெளியிடலாம்!

507
0
SHARE
Ad

apple-logo-blue

கோலாலம்பூர், அக்டோபர் 13 – ஆப்பிள் நிறுவனம் வரும் அக்டோபர் 16-ம் தேதி ஊடகங்களுக்கான சிறப்பு அழைப்புகளை விடுத்துள்ளது.

அந்த நிகழ்வின் போது தனது அடுத்த தயாரிப்புகள் பற்றிய அறிவிப்பினை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், கடந்த மாதம் உலக அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 6 திறன்பேசிகளை வெளியிட்டு வர்த்தக உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் தாக்கம் சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இன்னும் தணியாத நிலையில், எதிர்வரும் 16-ம் தேதி ஊடகங்களுக்கு சிறப்பு அழைப்புகளை விடுத்துள்ளது. மேலும், அதனை ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகளும் செய்துள்ளது.

ஐபோன் 6 வெளியீட்டின் போது ஆப்பிள் இந்த முறையை கடைபிடித்ததால், தற்போதும் தனது அடுத்த புதிய தயாரிப்புகளை வெளியிடவே இத்தகைய நிகழ்வை ஆப்பிள் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது என்று நம்பப்படுகின்றது. எனினும், தற்போதய நிலையில் ஆப்பிளின் அடுத்த தயாரிப்பு பட்டியலில் ஐபேட் மற்றும் ஐமேக் கருவிகளே உள்ளன. எனவே ஆப்பிள் அந்த கருவிகள் பற்றிய அறிவிப்பினை வெளியிடும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆப்பிள் ஐபேட்களின் அடுத்த பதிப்பில் கைரேகை அடையாளம் காணும் தொழில்நுட்பம் (Finger Print Technology), ‘ஏ8 உணர்த்திகள்’ (A8 Processor) உள்ளிட்ட சிறப்புக் கூறுகளுடன் வெளிப்புறத் தோற்றத்திற்கான சிறிய அளவிலான அழகியல் மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

குறிப்பாக தற்போது வெளிப்புறத் தோற்றத்தில் உள்ள சாம்பல் மற்றும் வெள்ளி நிறங்களுடன், தங்க நிறமும் சேர்க்கப்பட்டுள்ளது என தொழில்நுட்ப வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் ஆப்பிள் வெளியீட்டுப் பட்டியலில் அடுத்ததாக காத்திருக்கும் மேக் இயங்குத்தளத்தின் அடுத்த பதிப்பான ‘ஒஎஸ் எக்ஸ், 10.0 யோசிமிட்டி’ (OS X, 10.10  Yosemite), ஐமேக் மற்றும் மேக் மினி போன்ற கருவிகளும் எதிர்வரும் 16-ம் தேதி வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ள்ளதாகவே பார்க்கப்படுகின்றது.

ஒஎஸ் எக்ஸ், 10.0 யோசிமிட்டி இயங்குதளமானது ஐஒஎஸ் 8 போல் பல்வேறு புதிய செயலிகளை அங்கீகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது கூடுதல் தகவாலாகும்.

எவ்வாறாயினும் ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கு எதிர்வரும் 16-ம் தேதி பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தும் நாளாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.